சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியைக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, அரசு பள்ளி பெண் ஆசிரியைக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக, பட்டதாரி ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே, தேன்கனிக்கோட்டை அடுத்த அந்தேவனப்பள்ளியில், அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி, தெலுங்கு சமூக அறிவியல் ஆசிரியர் வினோத்குமார், 45; இவர், சக பெண் ஆசிரியை ஒருவருக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, கல்வித்துறை அதிகாரிகளிடம் கடந்த மார்ச், 23ல் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. இதனால், கடந்த, 19ல், பாதிக்கப்பட்ட ஆசிரியையின் கணவர் நேரடியாக, தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் அலுவலகத்தில், ஆசிரியர் வினோத்குமார் மீது புகார் செய்தார். ஆனால், வினோத்குமாருக்கு, மேல்மட்ட அதிகாரிகள் வரை, செல்வாக்கு இருந்ததால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த, 23ல், அந்தேவனப்பள்ளி பஞ்., தலைவர் அரவிந்தன் தலைமையில் பெற்றோர், பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவின்படி, ஆசிரியர் வினோத்குமார் மீதான புகார் குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், வினோத்குமார் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கூறி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், அவரை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X