சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'கலெக்டரை வரச் சொல்லுங்க': காரை நிறுத்தி அரசு டாக்டர் அடாவடி

Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

குமாரபாளையம்: 'காரில் முகக்கவசம் அணியச் சொன்ன கலெக்டரை வரச் சொல்லுங்க' என, காரை குறுக்கே நிறுத்திய அரசு டாக்டரால், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து, ஆணையாளர் ஸ்டான்லிபாபு கூறியதாவது: குமாரபாளையம் நகராட்சி சார்பில், முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. நேற்று காலை, பஸ் ஸ்டாண்ட் அருகே, சுகாதார அலுவலர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் அபராதம் விதித்துக்கொண்டிருந்தனர். காலை, 10:30 மணியளவில் முகக்கவசம் அணியாதவாறு அரசு பெண் டாக்டர் சூர்யா காரில் வந்தார். அவரிடம், 'முகக்கவசம் அணிந்து கார் ஓட்டுங்க' என்று ராமமூர்த்தி கூறியதற்கு, 'நான் அரசு டாக்டர்; எனக்கே அறிவுரையா, முகக்கவசம் அணிந்துதான் கார் ஓட்ட வேண்டும் என யார் சொன்னது' என்று கேட்டார். அதற்கு நகராட்சி அதிகாரிகள், 'கலெக்டர்தான் சொல்லியுள்ளார்' என, கூறியுள்ளனர். தொடர்ந்து, 'கலெக்டரை இங்கு வரச் சொல்லுங்க' என, எந்த வாகனமும் செல்ல முடியாதபடி காரை சாலையின் குறுக்கே நிறுத்தினார். 30 நிமிடங்களுக்கு பின், நகராட்சி அலுவலர்கள் சமாதானம் செய்ய, முகக்கவசம் அணியாமல் காரை ஓட்டிச் சென்றார். இவ்வாறு, அவர் கூறினார். குமாரபாளையம், அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பாரதி கூறியதாவது: டாக்டர் சூர்யா, பவானியிலிருந்து பணிக்கு வருகிறார். இதுகுறித்து அவரிடம் பேசுகிறேன். அனைத்து டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அவசியம் அணிய வேண்டும் என, அறிவுறுத்துகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Roy -  ( Posted via: Dinamalar Android App )
27-ஜூன்-202018:17:30 IST Report Abuse
Roy Dismiss her from services for blocking the public road
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X