சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மயங்கிய ஆண் யானை கவலைக்கிடம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

மேட்டூர்: மர்மநோயால் அடுத்தடுத்து மூன்று யானைகள் இறந்த நிலையில், மலையடிவார கிராமத்தில் நுழைந்த ஆண் யானை, உடல்நல குறைவால் மயங்கி விழுந்தது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே லக்கம்பட்டி, ஆலமரத்துப்பட்டி ஊராட்சி அருகே வனப்பகுதி உள்ளது. அது, ஈரோடு மாவட்டம், சென்னம்பட்டி வனச்சரக கட்டுப்பாட்டில் உள்ளது. அச்சரகத்தின், தோனிமடுவு வனப்பகுதியில் யானைகள் அதிகளவில் வசிக்கின்றன. அங்கு, மூன்று வாரத்துக்கு முன், ஒரு யானை மர்மநோயால் இறந்தது. தொடர்ந்து, 1.5 அடி உயரமுள்ள சிறு தும்பிக்கையுடைய, 25 வயது பெண் யானை, கடந்த, 11ல் மர்ம நோயால் இறந்தது. 13ல், மற்றொரு ஆண் யானை உடல்நலம் பாதித்து இறந்தது. நேற்று காலை, தோனிமடுவு வனப்பகுதியில் இருந்து பெரியதண்டா கிராமத்தில் நுழைந்த, 6 வயது ஆண் யானை, அப்பகுதியிலுள்ள பச்சபாலிக்காடு ஓடை அருகே மயங்கி வழுந்தது. அந்த யானை, மர்ம நோயால் பாதிக்கப்பட்டு, பல நாளாக உணவு சாப்பிடாமல் மெலிந்து காணப்பட்டதால், மேட்டூர் வனத்துறையினர், சின்னதண்டா அரசு கால்நடை மருத்துவர் அரங்கநாதன், ஓசூரில் இருந்து வரவழைக்கப்பட்ட, யானைகள் சிறப்பு மருத்துவர் பிரகாஷ் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். சேலம் மாவட்ட வன அலுவலர் முருகன் தலைமையில் மேட்டூர் வனச்சரக ஊழியர்கள், அப்பகுதியில் முகாமிட்டு, யானைக்கு சிகிச்சையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். யானை கவலைக்கிடமான நிலையில் உள்ளதால், தொடர்ந்து மருத்துவக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X