பொது செய்தி

தமிழ்நாடு

சேலம் ஆர்.டி.ஓ., உள்பட 111 பேருக்கு கொரோனா: 24 பேர் குணம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

சேலம்: சேலம் ஆர்.டி.ஓ., உள்பட, 111 பேருக்கு, நேற்று தொற்று இருப்பது உறுதியானது. 24 பேர் குணம் அடைந்ததால், வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். சேலம் மாவட்டம், மாநகர் எல்லைகளில் நடக்கும் மருத்துவ பரிசோதனையில், தொற்று கண்டறியப்படும் நபர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் உள்ளனர். அவர்களில், ஓமலூர், 24, 27, 29 வயது ஆண்கள், 23, 45 வயது பெண்கள், தாரமங்கலம், 59 வயது மூதாட்டி, சேலம், 26 வயது ஆண், கிச்சிப்பாளையம், 51 வயது மூதாட்டி, 13, 5 வயது சிறுமிகள், 3 வயது சிறுவன், பெத்தநாயக்கன் பாளையம், 66, 70, 75 வயது மூதாட்டிகள், 62 வயது முதியவர், மேட்டூர், 21 வயது பெண், சின்னசேலம், 45 வயது ஆண், ஆட்டையாம்பட்டி, 57 வயது முதியவர், தாதகாப்பட்டி, 22 வயது ஆண், ஆத்தூர், 25, 33 வயது ஆண்கள், சீலநாயக்கன்பட்டி, 36 வயது ஆண், பொன்னம்மாபேட்டை, 49 வயது ஆண், கன்னங்குறிச்சி, 26 வயது ஆண் என, 24 பேர் குணம் அடைந்ததால், நேற்று வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும், நேற்று மட்டும், சேலம் மாவட்டம் முழுதும், 111 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து, கொரோனா வார்டில், 190 பேர் உள்ளனர். இதில், சேலம் ஆர்.டி.ஓ.,வுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது. சமீபத்தில், அம்பேத்கர் சிலை இடமாற்றுவது தொடர்பாக, ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், தொற்று பாதிப்புக்குள்ளான, போலீஸ் உதவி கமிஷனர் பங்கேற்றிருந்தார். அவரது அருகில், ஆர்.டி.ஓ., அமர்ந்திருந்தார். இதனால், தொற்று பரவியிருக்கலாம் என, சுகாதாரத்துறையினர் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X