கொரோனாவை தோற்கடிக்க அரசிடம் திட்டமில்லை: ராகுல் விமர்சனம்| 'PM is silent, government has no plan to defeat Covid-19': Rahul Gandhi | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொரோனாவை தோற்கடிக்க அரசிடம் திட்டமில்லை: ராகுல் விமர்சனம்

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (56)
Share
Rahul, Coronavirus, Corona, Covid-19, india, Defeat Virus, CoronaVirus crisis, COVID-19 pandemic, india Govt, PM, pm modi, ராகுல், கொரோனா, தோற்கடிக்க, திட்டம், இல்லை, வைரஸ்

புதுடில்லி: கொரோனா வைரசை தோற்கடிக்க இந்திய அரசிடம் எந்த விதமான திட்டமும் இல்லை என காங்., முன்னாள் தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இதுவரை 5 லட்சத்து 8 ஆயிரத்து 953 பேர் பாதிக்கப்பட்டு, 15 ஆயிரத்து 685 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 6 நாட்களில் மட்டும் சுமார் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 18 ஆயிரத்து 552 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 384 பேர் பலியாகியுள்ளனர்.


latest tamil news


இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்து காங்., எம்.பி., ராகுல் தனது டுவிட்டரில் பக்கத்தில், ஐசிஎம்ஆர் குழு, கொரோனாவைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட அமைச்சர்கள் குழு ஆகியவற்றுடன் எந்தக் கூட்டமும் அரசு நடத்தவில்லை என்ற செய்தியை பகிர்ந்து அவர் பதிவிட்டுள்ளதாவது: நாட்டின் பல்வேறு புதிய பகுதிகளிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா வைரசை தோற்கடிக்க இந்திய அரசிடம் எந்தவிதமான திட்டமும் இல்லை. பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார். கொரோனா வைரசுடன் போரிட மறுத்து, அதனிடம் மோடி சரணடைந்துவிட்டார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X