சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் கொரோனா: மருத்துவமனையில் 25 பேர் பலி

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
மதுரை, கொரோனா, மருத்துவமனை, மரணம், coronavirus, corona, covid-19, madurai, tamil nadu, tn news, corona death, coronavirus outbreak, covid-19 pandemic, corona patients, corona in madurai, india,

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இன்று (ஜூன் 27) 7 பேர் பலியாகினர். மூன்று நாளில் 25 பேர் இறந்துள்ளனர்.

மதுரையில் 650 படுக்கை வசதி கொண்ட மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொரோனாவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு மூன்று விதமான வார்டுகள் உள்ளன. தீவிரப் பாதிப்புள்ளோரை அனுமதிக்க ஐ.சி.யூ., வார்டு, அறிகுறியற்ற மிதமான பாதிப்புள்ளோரை கண்காணிக்க தனி வார்டு, கொரோனா அறிகுறியுடன் வரும் பிற நோயாளிகளை அனுமதித்து பரிசோதிக்க 'சாரி' (SARI) என்னும் வார்டு உள்ளது. ஒரு வாரமாக இந்த சாரி வார்டில் தொடர் மரணங்கள் நிகழ்கின்றன.


latest tamil news


பரிசோதனை முடிவு வரும் முன்பே நோயாளிகள் இறப்பதால், 'கொரோனா சந்தேக மரணம்' என அழைக்கின்றனர். முதலில் தினமும் 4 பேர் இறந்தனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 13 பேர் பலியாகினர். நேற்று 5 பேர், இன்று 7 பேர் இறந்துள்ளனர். இதில் கொரோனாவிற்கு இறந்தவர்களும் உள்ளனர். 20 பேருக்கு இன்னும் பரிசோதனை முடிவு அறிவிக்கப்படவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
27-ஜூன்-202019:18:03 IST Report Abuse
Vena Suna வேறு ஏதேனும் காரணம் இருக்கும்...
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
27-ஜூன்-202018:09:49 IST Report Abuse
A.George Alphonse இது என்ன மதுரைக்கு வந்த சோதனை.அம்மா தாயே மதுரை மீனாக்ஷியே மதுரையை காப்பாற்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X