சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

அறிவியல் ஆயிரம்

அதிகரிக்கும் காசநோய் மரணம்


கொரோனா பாதிப்பால் இந்தியாவில் அடுத்த ஐந்தாண்டுகளில் கூடுதலாக 95 ஆயிரம் காசநோய் மரணங்கள் ஏற்படும். இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்காவில் மொத்தமாக 1.10 லட்சம் பேர் பலியாவர் என ஐரோப்பிய மருத்துவ பத்திரிகை ஆய்வு தெரிவித்து உள்ளது. கொரோனா பாதிப்பால், சுகாதார ஊழியர்கள் கொரானா தடுப்பு நோய் பணிகளுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் காசநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும் சிகிச்சையில் தாமதம் போன்றவை
காரணமாக இந்த கூடுதல் மரணங்கள் ஏற்படும் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'கர்நாடகாவின் நெற்களஞ்சியம்' என மாண்டியாவை கூறுவர். தமிழகத்திற்கு வரும் 'கர்நாடகா பொன்னி' இங்குதான் அதிகம் விளைகிறது. மாண்டியாவில் காவிரிக்கு பொன்னி என ஒரு பெயர் உள்ளது. இதனால் 'கர்நாடகா பொன்னி' என ஆனது. 1930ல் கிருஷ்ணராஜசாகர் அணை வருவதற்கு முன் மாண்டியா வளமின்றி இருந்தது. நெல் தவிர நீர் அதிகம் தேவைப்படும் கரும்பும் இங்கு விளைகிறது. கேழ்வரகும் அதிகம் விளைகிறது. பெங்களூரு விவசாய பல்கலை கிளையும், மாண்டியா விவசாயக் கல்லுாரியும் விவசாய ஆராய்ச்சிகளை நடத்துகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X