பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 78,335 பேருக்கு கொரோனா: பலி ஆயிரத்தை தாண்டியது

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
CoronaVirus, CoronaCases, Tamilnadu, Discharge, TN_CoronaUpdates, TN_Health, TN_FightsCorona, Corona, TNGovt, Covid-19, PositiveCases, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,335 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை : தமிழகத்தில் இன்று 3,713 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 3624 பேர் தமிழகத்தை சேர்ந்தவர். 8 பேர் வெளிநாட்டில் இருந்தும், 81 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள்.

இன்று மட்டும் 34,805 பரிசோதனைகள் நடந்தது. இதனுடன் சேர்த்து, இதுவரை 10 லட்சத்து 77 ஆயிரத்து 454 பரிசோதனைகள் நடந்தது. அதேபோல், இன்று மட்டும் 32 ஆயிரத்து 068 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதனால், பரிசோதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 25 ஆயிரத்து 059 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news



இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,300 பேர் ஆண்கள், 1,412 பேர் பெண்கள் மற்றும் ஒருவர் மூன்றாம் பாலினத்தவர். இதனால், கொரோனா பாதித்த, ஆண்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 346 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 968 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 21 ஆகவும் உள்ளது. தமிழகத்தில் 89 ஆய்வகங்கள்(அரசு-47 மற்றும் தனியார் 42 ) உள்ளன. இன்று மட்டும் 2,737 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 094 ஆக உள்ளது.

வயது வாரியாக பாதிப்பு12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 3,796 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 65 ஆயிரத்து 213 பேரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 9 ஆயிரத்து 326 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மே 26 முதல் நேற்று(ஜூன் 26) வரை வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்த 78 ஆயிரத்து 786 பேரை பரிசோதனை செய்ததில் 267 பேருக்கும், மே 9ம் தேதி முதல் நேற்று வரை சர்வதேச விமானங்கள் மூலம் தமிழகம் வந்த 17,036 பேரில் 358 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. மே 14 முதல் ரயில் மூலம் தமிழகம் வந்த 17 ஆயிரத்து 360 பேரில் 403 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மே 19 முதல் சொந்த வாகனம் மற்றும் பஸ் மூலம் சாலை மார்க்க மாக வந்த ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 627 பேரை பரிசோதனை செய்ததில் 2,056 பேருக்கும், ஜூன் 1 முதல் நேற்று வரை கடல் மார்க்கமாக வந்த ஆயிரத்து 763 பேரில் 14 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று வரை விமானம் மூலம் சென்னை வந்த 120 பேருக்கும், கோவை வந்த 98 பேருக்கும், மதுரை வந்த 41 பேருக்கும், திருச்சி வந்த 8 பேர் என 267 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.


பலி அதிகரிப்பு


இன்று மட்டும் கொரோனா பாதித்த 68 பேர் உயிரிழந்தனர். அதில், 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 45 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால் , தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,025 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X