அரசை கேள்வி கேட்பவர்களை சீன ஏஜென்ட் என்பதா?; பா.ஜ.,வை கண்டிக்கும் சிவசேனா| Shiv Sena slams BJP over RGF donations charge amid China standoff | Dinamalar

அரசை கேள்வி கேட்பவர்களை சீன ஏஜென்ட் என்பதா?; பா.ஜ.,வை கண்டிக்கும் சிவசேனா

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (32)
Share
Shiv Sena, Slams, BJP, Congress, Rajiv Funds, Bharatiya Janata Party, Rajiv Gandhi Foundation, RGF, Chinese embassy, Ladakh, Indian soldiers, Saamana, Rahul Gandhi, eastern ladakh, politics, China, சிவசேனா, பாஜ, பாஜக, கண்டிப்பு, ராஜிவ் அறக்கட்டளை, காங்கிரஸ், சீனா, நிதி

மும்பை: ராஜிவ் அறக்கட்டளைக்கு சீன தூதரகம் நன்கொடை அளித்ததாக பா.ஜ., குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த பிரச்னைக்கும் லடாக்கில் நடந்த ஊடுருவலுக்கும், 20 இந்திய வீரர்களின் உயிர் தியாகத்துக்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.

எல்லையில் இந்திய - சீன விவகாரத்தில் பிரதமர் மோடியை ராகுல் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், ராஜிவ் அறக்கட்டளைக்கு சீன தூதரகத்திடம் காங்கிரஸ் நன்கொடை பெற்றதாக பா.ஜ., தலைவர் நட்டா வியாழனன்று குற்றம்சாட்டினார். இவ்விவகாரம் டில்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பா.ஜ.,வின் வழக்கமான திசைதிருப்பும் தந்திரம் என காங்கிரஸ் கூறியிருந்தது. தற்போது காங்.,க்கு ஆதரவாக சிவசேனாவும் களத்தில் இறங்கியுள்ளது.


latest tamil news


சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: சீன ஊடுருவல்கள் தொடர்பாக சோனியா மற்றும் ராகுல் எழுப்பிய பிரச்னைகளுக்கு பதிலளிக்காமல், சீனாவிடம் இருந்து காங்கிரஸ் நிதி பெறுவதாக பா.ஜ., தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சீன ஊடுருவலுக்கும், 20 வீரர்களின் தியாகத்துக்கும் இந்த நன்கொடைகளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதை பா.ஜ., சொல்ல வேண்டும்.

நம் நாட்டில், காங்கிரஸ் மட்டுமல்ல, பல அரசியல் தலைவர்களும், கட்சிகளும் வெளிநாடுகளின் மூலம் பலனடைந்திருக்கிறார்கள். இது குறித்து பாஜ., பேசுவது சேற்றில் கல்லை வீசுவது போன்றது. கடந்த 6 ஆண்டுகளில் 2 முறை ஜி ஜிங் பிங் இந்தியாவிற்கு வந்துள்ளார். அவரை குஜராத்துக்கு அழைத்து மோடி உபசரித்தார். ஆனால் ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, மறுபக்கம் எல்லையில் தாக்குவது சீனாவின் பழமையான கொள்கை.


latest tamil news


தற்போதைய சூழலில், முழு நாடும் பிரதமர் மோடியுடன் உறுதியாக நிற்கிறது. இந்த நெருக்கடி பா.ஜ.,வுக்கோ அல்லது காங்கிரசுக்கோ கிடையாது, முழு நாட்டிற்கும் உண்டு. நாட்டின் கவுரவம் ஆபத்தில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் பா.ஜ., காங்கிரசுடன் சண்டை போட்டுக்கொள்ளலாம். ஆனால் இது சீனாவுக்கு எதிராக போராட வேண்டிய நேரம். இப்போது அதை பற்றி மட்டும் பேசுங்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X