பொது செய்தி

தமிழ்நாடு

மானெக்சாவின் 12 வது நினைவு தினம்: ஊட்டியில் மலரஞ்சலி

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
மானெக்சாவின் 12 வது நினைவு தினம்: ஊட்டியில்  மலரஞ்சலி

ஊட்டி: இந்திய ராணுவத்தின் மிக உயர்ந்த பதவியான "பீல்டு மார்ஷல்' பதவியை பெற்ற முதல் இந்திய ராணுவ அதிகாரி என்ற பெருமையை பெற்றவர் சாம் மானெக்ஷா. கடந்த 1971ல் நடந்த இந்தியா - பாக்., போரில், இந்திய ராணுவத்தின் வெற்றிக்கும், பங்களாதேஷ் உருவாகவும் முக்கிய காரணமாக இருந்தவர். இரண்டாம் உலகப் போர், பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போர், இந்திய-சீனப் போரில் பங்கேற்றவர். இந்திய ராணுவத்தில், பல பொறுப்புகளை வகித்து, கடந்த 1969ல், இந்திய ராணுவத்தின் 8வது தளபதியாக பொறுப்பேற்றார். சிறந்த சேவைக்காக "பத்ம விபூஷண்' விருது பெற்றவர்.



பாகிஸ்தானுடனான போரின் போது , பிரதமராக இருந்த இந்திராவிடம் முரண்பட்டு, போர் குணத்துடன் போராடி பாகிஸ்தானை தோற்கடித்து சரணடைய செய்தவர். ராணுவ சேவையில் ஓய்வு பெற்று குன்னூர் வெலிங்டனில் இருந்தார். ஜூன் 27ல் உயிரிழந்தார். இவரின் ஊட்டி பார்சி ஜோராஸ்ட்ரியன் கல்லறை நினைவிடத்தில் இன்று 12வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இவரது நினைவிடத்திற்கு, வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டன்ட் ஒய்.பி.கே மோகன், கர்னல் சஞ்சீவ் பாச்ராய் உட்பட அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். எம்.ஆர்.சி., ராணுவ மையத்தின் ராணுவ வாத்திய இசை முழங்கியதுடன் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X