போதைக்கு ஆசைப்பட்டு சானிடைசர் குடித்து உயிரைவிட்ட 'குடி'மகன்கள்

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
வாஷிங்டன்: உலகம் முழுவதும் மது பிரியர்கள் விலை மலிவான போதைக்காக, அவ்வப்போது வித்தியாசமான முயற்சியில் ஈடுபடுவது வழக்கம். மது கிடைக்காதபோது ஸ்பிரிட், ஆல்கஹால் உள்ளிட்ட ரசாயனங்களை கலந்து மது குடித்து குடல் பாதிப்பு ஏற்பட்டு மடிந்தவர்கள் பலர். இந்தியாவிலேயே இதுபோல பல அடித்தட்டு மக்கள் முயற்சி செய்து மரணமடைந்துள்ளனர். மதுவின் கலவை தெரியாமல் இவ்வாறு செய்து உயிரை
Sanitizer, New Mexico, People Died, Drinking, Department of Health, methanol,COVID-19 patients, cornavirus, corona, covid-19, coronavirus outbreak, covid-19 pandemic, சானிடைசர், மது, நியூ மெக்சிகோ, மரணம், பலி

வாஷிங்டன்: உலகம் முழுவதும் மது பிரியர்கள் விலை மலிவான போதைக்காக, அவ்வப்போது வித்தியாசமான முயற்சியில் ஈடுபடுவது வழக்கம். மது கிடைக்காதபோது ஸ்பிரிட், ஆல்கஹால் உள்ளிட்ட ரசாயனங்களை கலந்து மது குடித்து குடல் பாதிப்பு ஏற்பட்டு மடிந்தவர்கள் பலர். இந்தியாவிலேயே இதுபோல பல அடித்தட்டு மக்கள் முயற்சி செய்து மரணமடைந்துள்ளனர். மதுவின் கலவை தெரியாமல் இவ்வாறு செய்து உயிரை விடும் 'குடி'மக்கள் பலருக்கு பாடமாக அமைந்துள்ளது இந்த சம்பவம்.

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் கை கழுவும் சானிடைசர் குடித்து மூவர் காலமாகியுள்ளனர். ஒருவருக்கு நிரந்தரமாக பார்வை பறிபோயுள்ளது. கொரோனா தாக்கத்தை அடுத்து, சானிடைசர் பயன்பாடு உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. சானிடைசர் கொண்டு கைகளை கழுவுவதால் கைகளைச் சுற்றியுள்ள கொரோனா வைரஸ் அழிகிறது. இதனால் அதன் விற்பனை களைகட்டியது.


latest tamil newsசானிடைசரில் ஆல்கஹால் உள்ளது. இதனைக் குடித்தால் போதை ஏறும். இதனால் மது வாங்க வசதி இல்லாதவர்கள் இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடுவது உண்டு. பொதுவாக சிறைச்சாலைகளில் மது கிடைக்காதபோது போதை ஏற்றும் இதுபோன்ற வஸ்துக்களை கைதிகள் பயன்படுத்தி உயிரை விடுகின்றனர். இதனாலேயே பல சிறைச்சாலைகளில் சானிடைசர் பயன்பாட்டுக்குத் தடை உள்ளது. கொரோனா தாக்கத்திற்கு முன்னர் பல நாடுகளில் இதற்காகவே சானிடைசர் திரவம் விற்பனை தடை செய்யப்பட்டிருந்தது.


latest tamil newsசில தனியார் நிறுவனங்கள் சானிடைசர் அதீத ஆற்றலுடன் செயல்பட்டு கிருமிகளை அழிக்க அதிக ஆல்கஹால் திரவத்தை அதில் சேர்கின்றனர். இதனை கைகளில் தேய்த்தாலே கைகள் எரியும். இதனை உட்கொள்வது மிகவும் ஆபத்தான விஷயம். இந்நிலையில் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் ஏழு பேர் போதைக்காக சானிடைசரை குடிக்க, அதில் மூவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளனர். மீதி நான்கு பேரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனையடுத்து அந்த மாகாண காவல்துறை இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சிடிசி-யின் அறிக்கைப்படி ஆல்கஹால் குறைவாக கலக்கப்பட்டு இருக்கும் சானிடைசர்களைப் பயன்படுத்துவது நல்லது என அறிவுறுத்தி உள்ளது. இதனால் தோலுக்கு பாதிப்பு ஏற்படாமல் கிருமிகளை கொல்ல இந்த சானிடைசர்கள் உதவும். ஆனால் பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் இந்தக் கட்டுப்பாட்டை பின்பற்றுவதில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.


latest tamil newsஇந்த சம்பவத்தை அடுத்து சானிடைசர்களது தரம் அமெரிக்காவில் அதிகமாக சோதனை படுத்தப்படுகிறது. வரம்புகளை மீறி அதிக ஆல்கஹால் கலந்து தயாரிக்கப்படும் சானிடைசர் நிறுவனங்களைத் தடைசெய்ய சிடிசி அறிவுறுத்தியுள்ளது. உலகம் முழுவதும் இதுபோன்ற பிரச்னை உள்ளது. ஆல்கஹால் கலக்கப்பட்டு இருக்கும் சில பொருட்களின் மூலம் போதையை தேட பல ‛குடி'மகன்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். நம்மூர் விஷச் சாராயம்போல அமெரிக்காவில் சானிடைசர் காரணமாக பல மதுப்பிரியர்கள் மரணம் அடைந்து வருவது தொடர்கதையாகி விட்டது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
27-ஜூன்-202022:04:21 IST Report Abuse
S. Narayanan வெட்டி முண்டம் வீணா போன தண்டம்.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
27-ஜூன்-202019:46:46 IST Report Abuse
A.George Alphonse நமது நாட்டு "குடி" மகன்கள் எவ்வளவோ மேல். நாடு முழு ஊரடங்கை சீரியஸாக அமுல் படுத்தியபோதும் இதுபோன்ற கேவலமான முறையில் நடந்து யாரும் உயிரை விடவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X