பொது செய்தி

இந்தியா

கோவாவில் கொரோனா சமூகப்பரவலாக மாறி உள்ளது: முதல்வர் தகவல்

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Goa, CoronaVirus, Covid-19,  கோவா, கொரோனா, corona, goa cm, Pramod Sawant, panaji, coronavirus outbreak, covid-19 pandemic, corona spread, corona patients, corona news, new coronavirus cases, Community transmission, Community transmission in goa

பனாஜி: கோவாவில் கொரோனா சமூக பரவலாக பரவ ஆரம்பித்துள்ளது என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது; பலி 16 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கோவாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு இதுவரை 1,039 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது; 2 பேர் பலியாகி உள்ளனர். 370 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.


latest tamil news



இந்நிலையில், கோவாவில் கொரோனா சமூக பரவலாக மாறியுள்ளது என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கோவாவில் கொரோனா தொற்று பல்வேறு பகுதிகளிலிருந்தும் கண்டறியப்பட்டு வருகிறது. இங்கு சமூக பரவலாக மாறிவிட்டது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போலீசார் திறமையாக பணியாற்றி வருகின்றனர். மக்கள் தான் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை. மாஸ்க் அணிவதும், சமூக விலகலை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


சமூக பரவல் என்பது...


கொரோனா வைரஸ் பாதிப்பை, நான்கு நிலைகளாக மருத்துவ நிபுணர்கள் வரையறை செய்துள்ளனர். இதன்படி, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது, முதல் நிலை. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது இரண்டாவது நிலை. வெளிநாடுகளுக்கு செல்லாதோர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இல்லாதவர்களுக்கு, வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு, இந்த பாதிப்பு எப்படி வந்தது என கண்டுபிடிக்க முடியாத நிலை, சமூக பரவல் என கூறப்படுகிறது. இது, மூன்றாவது நிலை. கடைசியாக, நாடு முழுவதும் அனைவருக்கும் வைரஸ் பரவி, பேரழிவை ஏற்படுத்துவது, நான்காவது நிலை.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
27-ஜூன்-202022:09:44 IST Report Abuse
R. Vidya Sagar இவர்தான் உண்மையை ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
27-ஜூன்-202021:33:16 IST Report Abuse
siriyaar இவர் உண்மை பேசுவதால் இவர் மோடியை விட நலலவரக தெரிகிறார்
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஜூன்-202020:27:50 IST Report Abuse
Tamilan இது ஒட்டுமொத்த உலகையே முடக்க வேண்டிய நேரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X