பொது செய்தி

இந்தியா

ஒரே தலைநகரில் இரண்டு பெண் தலைமை செயலாளர்கள்

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் முதன் முறையாக பெண் ஒருவர் தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து ஒரே தலைநகரில் இரண்டு பெண் தலைமைசெயலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.latest tamil newsபஞ்சாப் மாநிலத்தின் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் வினய் மகாஜன். இவர் 1987 ம் ஆண்டு பேட்சை சேர்ந்தவர். இவர் தற்போது மாநில தலைமை செயலாளராக நியமனம் செய்யயப்பட்டுள்ளார். தற்போது உள்ள தலைமை செயலாளரான கரண் அவ்தார் சிங் வரும் ஆக.,31 ம் தேதி ஒய்வு பெறுகிறார்.

பல்வேறு போட்டிகளுக்கிடையே இந்த உயரிய பதவி இவருக்கு கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு ஜூலையில் ஓய்வு பெற உள்ள சித்து , சதீஷ் சந்திரா மற்றும் மகாஜனின் பேட்சை சேர்ந்த விஸ்வஜித் கன்னாவும் இப்பதவிக்கு பரிசீலிக்கப்பட்டனர்.


latest tamil newsமாநிலத்தில் உள்ள ஒரே பஞ்சாப் கேடர் அதிகாரியான மகாஜன் இதுவரை கூடுதல் தலைமை செயலாளர், முதலீட்டு ஊக்குவிப்பு, தொழில்கள் மற்றும் வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் உள்ளிட்ட துறைகளில் பணி புரிந்துள்ளார்.

இவர் டில்லி லேடி ஸ்ரீராம் பல்கலையில் பொருளாதாரம் பயின்றுள்ளார். தொடர்ந்து கோல்கட்டாவின் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவர் வரும் 2024 ம் ஆண்டு வரையில் பதவியில் நீட்டிப்பார். இவரது கணவர் தினகர் குப்தா மாநில போலீசின் டைரக்டர் ஜெனரலாக பதவி வகித்து வருகிறார்.

வின்னி மகாஜன் மத்திய அரசில் கடந்த 2005 ம் ஆண்டு முதல் 2012 வரையில் நிதி, தொழில் மற்றும் வர்த்தகம், தொலை தொடர்பு தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி உள்ளார்.

தற்போதைய தலைமை செயலாளராக உள்ள கரண் அவ்தார் சிங் -க்கும் மாநில அமைச்சர்களுக்கும் இடையே மோதல் உருவானது. இதனையடுத்து மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர்சிங் , கரண் அவ்தார் சிங் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே அவரை சிறப்பு தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் , ஹரியானா மாநிலங்களுக்கு சண்டிகர் நகரம் ஒரே தலைநகரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது பஞ்சாப் மாநிலத்தில் தலைமை செயலாளராக முதன் முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார். ஹரியானா மாநிலத்தின் தற்போதைய தலைமை செயலாளராக கேஷ்னி ஆனந்த் அரோரா என்னும் பெண்மணி பணியாற்றி வருகிறார்.

மேலும் வின்னிமகாஜனின் தந்தை பி.பி.மகாஜனும் பஞ்சாப் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
28-ஜூன்-202001:38:14 IST Report Abuse
கதிரழகன், SSLC இந்த ஐ ஏ எஸ் அதிகாரிங்க ஒருத்தரை ஒருத்தர் கட்டிக்கிட்டு ஒரே ஸ்டேட் ல இருக்கிறதை தடை செய்யணும். இம்புட்டு அதிகாரம் ஒரே எடத்துல சேர கூடாது.
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
27-ஜூன்-202020:37:19 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு இன்னும் கூட பத்து அதிகாரிகளை ஒரே எடத்துல போடலாம் மக்கள் வரிப்பணம்தானே போகும்?
Rate this:
Ravi - Hyderabad,இந்தியா
27-ஜூன்-202021:18:25 IST Report Abuse
RaviPunjab and Haryana are two different states. Therefore two different chief secretaries....
Rate this:
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
28-ஜூன்-202009:40:40 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டுYes. now I misunderstood. Then there is no surprise. This should not be made a news at all. Am I right?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X