பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ஜூலை 15 வரையில் சிறப்பு ரயில்கள் ரத்து

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

சென்னை: தமிழக அரசின் வேண்டுகோளின் படி தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் ஜூலை 15 வரை ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.



latest tamil news



தமிழகத்தில் தெற்கு ரயில்வே சார்பில் திருச்சி-செங்கல்பட்டு , மதுரை- விழுப்புரம், கோவை-காட்பாடி, கோவை-மயிலாடுதுறை , திருச்சி-நாகர்கோவில், கோவை- அரக்கோணம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா பரவல் வேகம் எடுத்து இருப்பதை அடுத்து தமிழக அரசு சிறப்பு ரயில்கள் இயக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என தெற்கு ரயில்வேக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனையடுத்து மேற்கண்ட வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் நாளை மறுநாள் (29 ம் தேதி) முதல் ஜூலை 15 ம் தேதி வரையில் ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட ரயில்களில் பயணம் செய்வதற்காக முன் பதிவு செய்த பயணிகளுக்கு முழு கட்டணம் திருப்பி அளிக்கப்படும். ஆன்லைன் மூலம் டிக்கெட் விண்ணப்பித்தவர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கிற்கு டிக்கெட் கட்டணம் செலுத்தப்படும்.


latest tamil news



மேலும் சென்னை சென்ட்ரல்- டில்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
27-ஜூன்-202021:41:37 IST Report Abuse
S. Narayanan கொரோனா, ஊரடங்கு மற்றும் ரயில், பஸ் போக்குவரத்து முடக்கத்தான் மக்கள் வாழ வழி தெரியாமல் பட்டினியால் வாடி சிக்கி தவிக்கின்றனர். என்று தீருமோ இந்த கொரோனா தாக்கம்..
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
27-ஜூன்-202021:19:07 IST Report Abuse
siriyaar அப்பரம் ஏரோ பிளேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X