பொது செய்தி

இந்தியா

'8 மாநிலங்களில் இந்தியாவின் 85% பாதிப்பு, 87% பலி'

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Harsh Vardhan, Coronavirus, Covid-19, corona, Health ministry, Group of Ministers, GoM, eight Indian states, CORONA, CORONAVIRUS OUTBREAK, COVID-19 PANDEMIC, CORONA NEWS, Union Minister, HEALTH MINISTER, Maharashtra, Delhi, Tamil Nadu, Gujarat, Telangana, Andhra Pradesh, UP, West Bengal, CORONAVIRUS DEATH, Coronavirus cases,

புதுடில்லி: இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் 85 சதவீதம், மொத்த பலியில் 87 சதவீதம், மஹா., டில்லி, தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் இருப்பதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கையும் 16 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இந்நிலையில், மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்ததாவது: இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. மஹாராஷ்டிரா, டில்லி, தமிழ்நாடு, குஜராத், தெலுங்கானா, ஆந்திரா, உ.பி., மற்றும் மேற்குவங்கம் ஆகிய 8 மாநிலங்கள் இந்தியாவில் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளன. நாட்டின் மொத்த பாதிப்பில் 85 சதவீதம், மொத்த இறப்பில் 87 சதவீதம், இந்த 8 மாநிலங்களில் தான் உள்ளது. அங்கு மத்திய அரசு சார்பில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


latest tamil newsகடந்த இரு வாரங்களாக நாட்டில் கொரோனா வேகமெடுத்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில், மேற்கு வங்கத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களும் கொரோனாவை நீட்டிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் வைரஸ் பாதிப்பிலிருந்து 58 சதவீதம் பேர் மீண்டுள்ளனர். உயிரிழப்பு 3.08 சதவீதமாக உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram Mayilai - Mayiladuthurai,இந்தியா
27-ஜூன்-202021:51:02 IST Report Abuse
Ram Mayilai இதில் குஜராத், உத்திரப்பிரதேசம் மட்டும் BJP ஆட்சி செய்யும் மாநிலங்கள். UP மக்கள் தொகை 24 கோடி.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
27-ஜூன்-202021:21:31 IST Report Abuse
sundarsvpr மக்கள் அன்றாட தேவைகளுக்கு சில தளர்வுகள் செய்கிறோம். அதனால் பாதிப்பு ஏற்படவில்லை என்பதற்கு உத்திரவாதம் இல்லை. ஆனால் திருக்கோயில்களுக்கு சென்றால் தோற்று பரவும் என்ற வாதம் ஏற்புடையது இல்லை. ஆண்டவனிடம் பிரார்த்தனை மன அழுத்தத்தை பயத்தை குறைக்கும். தோற்று பரவுதல் பயம் ஒரு காரணம். தேவாரம் திவ்யபிரபந்தம் காதால் கேட்பது ஒரு மருந்துதான். மந்திரத்திற்கு சக்தி உண்டு என்பது ஏற்கப்பட்ட உண்மை. கோயில்களுக்கு சென்று வந்தால் அதுவே நோய் எதிர்ப்பு சக்தி.
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஜூன்-202020:49:21 IST Report Abuse
Tamilan இதில் கர்நாடகாவும் சேர்ந்துதான் உள்ளது . எங்கெங்கெல்லாம் மற்ற மதவாதிகள் அதிகம் இருக்கிறார்களோ , ஆதிக்கம் செலுத்துகிறார்களோ , எங்கெங்கெல்லாம் மற்ற மதவாத நாடுகளில் இருந்து நிறைய பேர் வந்து செல்கிறார்களோ அங்கெல்லாம் உயர்ந்துள்ளது . போக மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளில் , அத்தியாவசிய பொருள்கள் விற்கும் பகுதிகளில் சரியான வழிமுறைகளை பின்பற்றாததும் ஒரு காரணம் . இந்த லசனத்தில் ஏன் ஊரடங்கை தளர்வு செயகிறார்கள் . வளர்ந்த நாடுகள் எல்லாம் முதலில் அடிவாங்கி நிமிர முயற்சிக்கும் நேரத்தில் இப்போது இந்தியா வாங்கிய அடி வெளியில் வர ஆரம்பித்து விட்டது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X