பொது செய்தி

தமிழ்நாடு

கோவை, திருப்பூர் கொரோனா ரவுண்டப்

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
கோவை, திருப்பூர் கொரோனா ரவுண்டப்

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய, 36 வயது எஸ்.ஐ., 23 வயது பெண் போலீஸ் மற்றும், போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும், 56 வயது பெண்ணுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதியானது. இதையடுத்து, இவர்கள் மூவரும் சந்தித்த நபர்கள், உடனிருந்தவர்கள் என, 95 பேரிடம் மாதிரி சேகரிக்கப்பட்டு, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், எஸ்.ஐ.,யின் 27 வயது மனைவி, எட்டு வயது மகன் மற்றும் சுகாதார பணியாளரின், 60 வயது அக்காவுக்கு நேற்று மாலை, கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சுகாதாரத்துறையினர் மூவரையும், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்து வருகின்றனர்.


latest tamil news




சுகாதாரத்துறையினர் கூறுகையில், கொரோனா உறுதியான, எஸ்.ஐ., மனைவி மற்றும் மகன், சுகாதார பணியாளரின் அக்கா, இவர்கள் சந்தித்த நபர்களின் தகவல்களை சேகரித்து வருகிறோம். விரைவில் அனைவருக்கும் மாதிரி சேகரிக்கப்படும், என்றனர்.


திருப்பூர்:




எஸ்.ஐ., மனைவிக்கு தொற்று போலீஸ் ஸ்டேஷன் மூடல்



சென்னையில் இருந்து திருப்பூர் வந்த பெண் எஸ்.ஐ.,க்கு கொரோனா உறுதியானதால், அவர் கணவர் பணியாற்றி வரும், வடக்கு போலீஸ் ஸ்டேஷன் மூடப்பட்டது.

திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ஒருவர், போலீஸ் குடியிருப்பில் வசிக்கிறார். இவரது மனைவி சென்னையில், எஸ்.ஐ., யாக உள்ளார்; அவர், 24ம் தேதி, சென்னையில் இருந்து திருப்பூர் வந்தார்.
மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அத்துடன், அவரது வீட்டில் கணவர், மகள், மாமனார், மாமியார் ஆகியோருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டனர்.

போலீஸ் குடியிருப்பு, 'பேரிகார்டு' வைத்து, 'சீல்' வைக்கப்பட்டது. பெண் எஸ்.ஐ., கணவர் பணியாற்றி வரும் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் மூடப்பட்டது. அனைத்து பகுதிகளிலும், கிருமி நாசினி அடிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


9 பேருக்கு தொற்று



திருப்பூர் மாவட்டத்தில் நேற்று, ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு, 147 ஆக உயர்ந்துள்ளது.

திருவள்ளூர் சென்று வந்த, உடுமலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த, தலா, 30 வயதுள்ள கணவன், மனைவி, ஏழு மற்றும் ஐந்து வயதுள்ள மகன்கள் ஆகிய நான்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து வந்த, அனுப்பர்பாளையத்தை சேர்ந்த, 29 வயது பெண், சென்னையில் இருந்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு பணியிட மாறுதல் பெற்று வந்த, 31 வயது பெண் மற்றும் காங்கயம் ராம்நகரை சேர்ந்த, 58 வயது ஆண், தேனியில் இருந்து வந்த, வீரபாண்டியை சேர்ந்த, 20 மற்றும், 40 வயதுள்ள பெண்கள் என, ஒன்பது பேருக்கு நேற்று தொற்று உறுதியாகியுள்ளது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வெளிநாடு, வெளி மாவட்டங்களில் இருந்து வருவோர் எண்ணிக்கை அதிகமானதால், நேற்று மட்டும், 710 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. கொரோனா தொற்றுடன் வருவதால், மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு, 147 ஆக உயர்ந்துள்ளது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X