அஸ்ட்ராஜெனேக்காவின் கொரோனா தடுப்பூசி ஆய்வு உலகளவில் முன்னணி: உலக சுகாதார அமைப்பு

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

ஜெனிவா: பிரிட்டனைச் சேர்ந்த அஜ்ட்ரோஜெனேக்காவின் கொரோனா தடுப்பூசி ஆய்வு உலக அளவில் முன்னணியிலும் மிகவும் மேம்பட்ட கட்டத்திலும் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.



latest tamil news



உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளிலும் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். உலகம் முழுவதும் 200 ஆராய்ச்சி திட்டங்கள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் முயற்சியில் உள்ளன. இதில் 15 ஆராய்ச்சி திட்டங்கள் மனிதர்கள் மீதான பரிசோதனை என்ற கட்டத்தை எட்டியுள்ளன. இவற்றில் ஆக்ஸ்போர்டு பல்கலையும் அஸ்ட்ரோஜெனேக்காவும் இணைந்து செயல்படுத்தும் கொரோனா தடுப்பூசி திட்டம் உலகம் முழுவதையும் ஈர்த்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியலாளர் சவுமியா சுவாமிநாதன் கூறியதாவது, 'தடுப்பூசி பரிசோதனை எந்த கட்டத்தில் உள்ளது மற்றும் அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது பிரிட்டனின் அஸ்ட்ரோஜெனேக்காவின் தடுப்பூசி ஆராய்ச்சி தான் முதலிடத்தில் உள்ளது.


latest tamil news



இந்த ஆராய்ச்சியில் விரைவில் நல்ல முடிவை எதிர்பார்க்கலாம். இதற்கு அடுத்தபடியாக மாடெர்னா நிறுவனத்தின் தடுப்பூசி ஆராய்ச்சி நல்ல முன்னேற்றத்தில் இருக்கிறது'இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
27-ஜூன்-202021:45:15 IST Report Abuse
sundarsvpr மருந்து கண்டுபிடிக்கும் வேகத்தைவிட பாதிப்பு அதன் குறிக்கோளை அடைந்துவிடும். இதனைத்தான் ஆண்டவன் திருவிளையாடல் என்று புராணங்கள் கூறுகின்றன, விளையாட்டை அவனால்தான் தடுக்க இயலும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X