பொது செய்தி

இந்தியா

மஹாவில் புதிய உச்சம்; ஒரே நாளில் 5,318 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Maharashtra, Mumbai, CoronaVirus, covid-19, bmc, corona, coronavirus outbreak, covid-19 pandemic, new coronavirus cases, positive cases, corona patients, corona spread, corona death, மஹா, மஹாராஷ்டிரா, மும்பை, கொரோனா, corona cases in Maharashtra, india,

மும்பை: மஹாராஷ்டிராவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,318 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாட்டில் அதிக கொரோனா பாதிப்புக்குள்ளான மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. இந்நிலையில், அங்கு புதிதாக இன்று(ஜூன் 27) மட்டும் 5,318 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1,59,133 ஆக அதிகரித்தது.


latest tamil news



இன்று மட்டும் 167 பேர் பலியாகினர். இன்று மேலும் 4,430 பேர் குணமாகினர்; 84,245 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 67,600 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மும்பையில்...


மும்பையில் மட்டும் புதிதாக 1,460 பேருக்கு கொரோனா உறுதியானது; 41 பேர் பலியாகினர். இதனையடுத்து மொத்த பாதிப்பு 73,747 ஆகவும், மொத்த பலி, 4,282 ஆகவும் ஆனது. 27,134 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
27-ஜூன்-202021:55:35 IST Report Abuse
sundarsvpr குணமானவர்கள் எண்ணிக்கை கூடுதலாய் இருப்பது மனதிற்கு ஒரு நம்பிக்கை. கூடுதல் எப்போது முடிவடையும் என்பதுதான் ஒரு உறுத்தல் . இதற்குத்தான் விரைவில் மருந்து தேவை. குணமானவர்களுக்கு மீள வருமா என்பதை பற்றி செய்திகளில் இல்லை. அப்படி இல்லையென்றால்தான் குணமடைந்தவர் புள்ளிவிபரம் சரியாய் இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X