அரசியலமைப்பு எங்கள் வழிகாட்டி : பிரதமர் மோடி பேச்சு

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: “நாட்டு மக்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கிய எங்கள் பயணத்தில், இந்திய அரசியலமைப்பு, வழிகாட்டும் ஒளியாக இருக்கிறது,” என,பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.கேரளாவின் பத்தனம்திட்டாவில் உள்ள மார் தோமா சிரியன் தேவாலயத்தின் தலைவரான, மதகுரு ஜோசப் மார் தோமாவின், 90வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப் பட்டது. அர்ப்பணிப்பு இவ்விழாவில் கலந்துகொண்ட
அரசியலமைப்பு எங்கள் வழிகாட்டி : பிரதமர் மோடி பேச்சு

புதுடில்லி: “நாட்டு மக்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கிய எங்கள் பயணத்தில், இந்திய அரசியலமைப்பு, வழிகாட்டும் ஒளியாக இருக்கிறது,” என,பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.கேரளாவின் பத்தனம்திட்டாவில் உள்ள மார் தோமா சிரியன் தேவாலயத்தின் தலைவரான, மதகுரு ஜோசப் மார் தோமாவின், 90வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப் பட்டது.


அர்ப்பணிப்புஇவ்விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:ஏசு கிறிஸ்துவின் துாதரான செயின்ட் தாமசின் உன்னத கொள்கைகளுடன், மார் தோமா சிரியன் தேவாலயம் இணைக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் வாழ்க்கையில், நேர்மறையான மாற்றங்களை கொண்டு வர, இந்த தேவாலயம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.மருத்துவம், கல்வி போன்ற துறைகளில், இந்த தேவாலயம் செய்த பணிகள் அளப்பரியது. நாடு மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக, ஜோசப் மார் தோமா, தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ளார்.


முக்கிய முடிவுநாங்கள், வசதியான அலுவலங்களில் அமர்ந்து, எந்தவொரு முடிவையும் எடுப்பதில்லை; களத்தில் இறங்கி, பொதுமக்களிடம் இருந்து கருத்துகளை பெற்ற பிறகே, முக்கிய முடிவுகளை எடுக்கிறோம். இந்திய அரசு, ஒரு போதும் மக்களின் நம்பிக்கை, பாலினம், ஜாதி, மதம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டியதில்லை. 130 கோடி மக்களுக்கும் அதிகாரம் அளிக்கவேண்டும் என்பதே எங்களின் எண்ணம்.

அதை நோக்கிய எங்கள் பயணத்தில், வழிகாட்டும் ஒளியாக, இந்திய அரசியலமைப்பு இருந்து வருகிறது.கொரோனா வைரசுக்கு எதிரான இந்த போராட்டத்தில், இந்தியா, மற்ற நாடுகளை காட்டிலும், மிகச் சிறந்த இடத்தில் உள்ளது. வைரசில் இருந்து குணமடைவோரின் விகிதம், அதிகரித்து வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள், மக்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றால், நல்ல முடிவுகள் கிடைத்துள்ளன. எனினும், நாம் அனைவரும் மேலும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. முக கவசம், சமூக இடைவெளி, பொது இடங்களில் கூடுவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டியது மிகவும்அவசியமாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் NPA CAA DEMONETIZATION GST NEET ETC ETC எல்லாமே மக்களின் விருப்பப்படியே கொண்டு வருகிறோம்ங்க எதை சொன்னாலும் நம்ப மாட்டேன்னா எப்படீங்க
Rate this:
Cancel
Pandiyan - Chennai,இந்தியா
28-ஜூன்-202016:11:54 IST Report Abuse
Pandiyan அய்யா வண்டி இப்ப டாப் கியர்ல போய்ட்டுருக்கு ...இப்பபோய் தத்துவத்தை அவிழ்த்து விடுறீங்களே ..ஆமா அந்த சீனகாரன் எப்படி உள்ளே வந்தான்? அதுவும் நேரு வரசொல்லிருப்பாரோ ??
Rate this:
Cancel
Sandru - Chennai,இந்தியா
28-ஜூன்-202015:02:27 IST Report Abuse
Sandru போன் வயர் எப்பவோ அந்த போச்சு .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X