பீஹார் தேர்தல்: முழுவீச்சில் களம் இறங்கியது பா.ஜ.,

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
பீஹார் தேர்தல்: முழுவீச்சில் களம் இறங்கியது பா.ஜ.,

இந்தாண்டு இறுதியில் நடக்கவிருக்கும் பீஹார் சட்டசபை தேர்தலில், பா.ஜ., புதிய வியூகங்களுடன் முழு வீச்சில் தயாராகி வருவதால், ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிரணியில் உள்ள கட்சிகளுக்கு மட்டுமல்லாது, கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதாதளத்துக்கும் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவல், லடாக் எல்லையில் சீனா மோதல் விவகாரங்கள் ஒருபுறமிருக்க, வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெறும், பீஹார் சட்டசபை தேர்தலுக்கான வியூகத்தை வகுப்பதில், பா.ஜ., முதலிடத்தில் இருக்கிறது.பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில், டில்லியிலிருந்தபடியே, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடைபெறுகிறது. இதில், முக்கிய நிர்வாகிகள் மட்டுமல்லாது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அவ்வப்போது பங்கேற்கிறார்.கடந்த முறை, உ.பி., சட்டசபை தேர்தலில், 'மைக்ரோ மேனேஜ்மென்ட்' என்ற வியூகம் வகுத்து பெற்ற அதே அபார வெற்றியை, பீஹாரிலும் பெற வேண்டுமென்பதே, இந்த ஆலோசனையின் மையமாக உள்ளது.

இதற்காக, லட்சக்கணக்கிலான மொபைல் போன்கள் வாங்கப்பட்டு, பீஹார் பா.ஜ., நிர்வாகிகளுக்கு தரப்பட்டுள்ளது. இதன் மூலம், டில்லி தலைமை அலுவலகத்திலிருந்தபடியே, பீஹாரின் ஒவ்வொரு கிராமமும் தனி, 'ஆப்' வாயிலாக கையாளப்பட்டு வருகிறது.மாநிலம் முழுதும், 'பூத் கமிட்டி'கள் ஒவ்வொன்றிலும், ஏழு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தீவிர விவாதம்



இவர்களுக்கு, 'சப்த ரிஷிகள்' என்று பெயர். அந்த வகையில் மொத்தம், 72 ஆயிரம் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன், டில்லி மேலிடம், நேரிடையாக பேசி வருகிறது.இவர்கள் அனைவரும் முன்வைக்கும் பரிந்துரைகளும், கருத்துகளும் தான், பா.ஜ., மேலிட வட்டாரத்தில் மட்டுமல்லாது, பீஹார் தேர்தல் களத்திலும், தீவிர விவாதத்துக்கு உள்ளாகிஉள்ளன.இது குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:பீஹார் அரசியல் களம், முன்னெப்போதும் இல்லாத வகையில் மாறிஉள்ளது. கொரோனா விவகாரத்தில் சிக்கிய புலம் பெயர் தொழிலாளர்களில், பீஹாரைச் சேர்ந்தவர்கள் தான், பெரும் அவஸ்தைகளை சந்தித்தனர். நாட்டின் முக்கிய சாலைகளில், சாரை சாரையாக நடந்தவர்களில், பெரும்பாலானவர்கள் இவர்கள் தான். தங்களை நிதிஷ்குமார் கைவிட்டுவிட்டார் என, இம்மக்கள் கொதிப்பில் உள்ளனர்.

கொரோனா விவகாரம் துவங்கியதில் இருந்தே, மற்ற மாநிலங்களின் முதல்வர்கள் தீவிரம் காட்டிய வேளையில், நிதிஷ் குமார் இருந்த இடமே தெரியவில்லை.மாநிலத்தில் உள்கட்டமைப்பே இல்லாத நிலையில், திடீரென பல லட்சம் பேரை மீண்டும் பீஹாருக்கே வரவழைத்து கொள்வதில் தீவிரம் காட்டினால், நெருக்கடியில் மாட்டுவோம் என, அவர் கருதிவிட்டார்.

அதனால் தான், அவர் அடக்கி வாசித்தார். ஊடகங்களை சந்திக்கவே இல்லை. இதை, அந்த தொழிலாளர்களும், பீஹாரில் உள்ள அவர்களின் குடும்பங்களும் மறக்கத் தயாரில்லை. இதனால், நிதிஷ் குமாரின் தலைமையில், தேர்தலை சந்தித்தால், மக்களின் அதிருப்திக்கு, பா.ஜ.,வும் தப்ப முடியாது.நிதிஷ் குமார், கொரோனா விவகாரத்தில், சிறந்த நிர்வாகி என்பதை நிரூபிக்கத் தவறியது மட்டுமல்லாமல், அரசு நிதியான, 1,600 கோடி ரூபாயை, தொண்டு நிறுவனத்துக்கு முறைகேடான வழியில் திருப்பிவிட்ட, 'ஸ்ரீஜன்' ஊழல் விசாரணையிலும், ஐக்கிய ஜனதாதள நிர்வாகிகள் சிக்கியுள்ளனர்.எதிர்தரப்பில், தேஜஸ்வி தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதள கூட்டணியும் சிதறிப் போய் கிடக்கிறது. லாலுவும், உடல்நலம் குன்றிவிட்டார்.




வலியுறுத்தல்



சகோதர சண்டையால், அவரது குடும்பமே களைஇழந்துவிட்டது. காங்கிரசின் நிலைமையும் உருப்படியாக இல்லை.எனவே, இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள, பா.ஜ., முன்வர வேண்டும். மஹாராஷ்டிராவில், சிவசேனாவை பின்னுக்குத் தள்ளி, அதன் இடத்தைப் பிடித்த, அதே மேஜிக்கை, பீஹாரிலும் பா.ஜ., செய்ய வேண்டும்.எதிரணியை உடைத்து, புதிய கட்சிகளை இழுத்து, கூட்டணியை பலப்படுத்துவது, தொகுதி பங்கீட்டில் கூடுதல் அதிகாரம் என, அனைத்துமே பா.ஜ.,வுக்கு சாதகமாக உள்ளதால், வரும் தேர்தலில், ஐக்கிய ஜனதாதளத்தை பின்னுக்கு தள்ளி, பா.ஜ.,வை முன்னிலைப்படுத்த வேண்டுமென, அழுத்தமாக வலியுறுத்தப்படுகிறது.'நிதிஷ்குமார் தலைமையில் தான் கூட்டணி' என கூறிவிட்டு, இத்தனை வியூகங்களுடன், பா.ஜ., தீவிரம் காட்டுவதால், ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிரணியில் உள்ள கட்சிகள் மட்டுமல்லாது, கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதாதளத்துக்கும், பெரும்
கலக்கம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கொரோனா தாக்கம் எதிரொலி 65 வயது முதல் தபால் ஓட்டு



கொரோனா வைரசின் தாக்குதலால், தபால் மூலம் ஓட்டளிப்பதற்கான வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.நாட்டில், 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் உடல் குறைபாடு உள்ளவர்கள் தான், தபால் மூலம் ஓட்டுப்பதிவு செய்யலாம் என, 2019ம் ஆண்டு அக்டோபரில், சட்டத் திருத்தம் செய்யப்பட்டது.தற்போது, கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, தேர்தல் கமிஷன் பரிந்துரையின் படி, இந்த விதியில், சட்ட அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. இதன்படி, சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர், தபால் மூலம் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்யலாம்.

கொரோனா வைரசால், 65 வயதுக்கு மேற்பட்டோர் அதிகம் பாதிக்கப்படுவதால், அவர்களின் நலன் கருதி, இந்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.தற்போதைய நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் மற்றும் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவோரும், தபால் மூலம், தங்கள் ஓட்டுகளை பதிவு செய்யலாம் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.விரைவில், பீஹார் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தபால் மூலம் ஓட்டளிப்பதற்கான வயதில் திருத்தம் செய்திருப்பதால், அம்மாநில மக்கள் முதலில் பயனடைவர்.இந்த சட்டத் திருத்தத்தை, இந்த ஆண்டு இறுதி வரை அமலில் வைத்திருக்க வேண்டும் என, சட்ட அமைச்சகத்திடம், தேர்தல் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.- நமது டில்லி நிருபர் -


Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஜூன்-202009:45:09 IST Report Abuse
தமிழ் ஏதாவது ஒரு விதத்தில் மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு ஒட்டுப்பிச்சை வாங்குவதே குறிக்கோள்.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
28-ஜூன்-202008:14:22 IST Report Abuse
Sampath Kumar உலகின் மொத்த கிலோமீட்டர் நாற்பதாயிரம் சொச்சம், இவரு நாற்பத்தியாம் கிலோ மீட்டர் நில பரப்பை சீனாவிற்கு காங்ரஸ் தரை வார்த்தது என்று சொல்லி ullaar இப்படி அண்ட புளுகு ஆகாச புளுகு ellaam இந்த சங்கிகளால் தான் முடியும் ?
Rate this:
28-ஜூன்-202014:27:05 IST Report Abuse
கடமை கண்ணியம் கட்டுப்பாடு neer ivvalvu vivarama karuthu potal neer aanti indian...
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
28-ஜூன்-202007:47:35 IST Report Abuse
தல புராணம் பீகார் ரெஜிமெண்டில் இறந்தவர்களின் போட்டோவை காட்டி மிரதமர் ஏற்கனவே ஒட்டு கேட்டு முடிச்சுட்டார். போன தடவை புல்வாமா, இப்போ கல்வான், லடாக். சீண்டி விட்டு பரபரப்பு ஏற்படுத்தி 20 உயிர்களை காவு கொடுத்ததே திட்டமிட்ட தேர்தலுக்கான அரசியல் ஆட்டம் தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X