பொது செய்தி

தமிழ்நாடு

விண்வெளி திட்டங்களில் பங்கேற்க மாநில அரசுகளுக்கு சிவன் அழைப்பு

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
விண்வெளி திட்டங்களில் பங்கேற்க மாநில அரசுகளுக்கு சிவன் அழைப்பு

சென்னை :''விண்வெளி திட்டங்களை செயல்படுத்த, மாநில அரசுகள் முன்வந்தால் அனுமதி வழங்கப்படும்,'' என, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவர், கே.சிவன் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்தபடி, இஸ்ரோ தலைவர் கே.சிவன், நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, சென்னையில் உள்ள நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில், ராக்கெட் தயாரித்தல், ஏவுதல், செயற்கைக்கோள் தயாரிப்பு மற்றும் விண்ணில் நிலைநிறுத்துதல் உள்ளிட்ட விண்வெளி ஆய்வு திட்டங்களில் பங்கேற்க, தனியாருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதனால், இஸ்ரோவின் பணிகள், எந்த விதத்திலும் பாதிக்காது. இஸ்ரோவின் ஆராய்ச்சி நடவடிக்கைகளில், தனியாருக்கு அனுமதி அளிக்கப்படாது; மேலும், இஸ்ரோ தனியார் மயமாக்கப்படாது.


'இன்ஸ்பேஸ்'



இந்திய விண்வெளி துறையின் கீழ், இஸ்ரோ உட்பட, தன்னாட்சி அதிகாரம் உடைய சில நிறுவனங்கள் உள்ளன. அதேபோல, விண்வெளி துறையின் கீழ், 'இன்ஸ்பேஸ்' என்ற தனி அமைப்பு செயல்படும். அதில், மூத்த விஞ்ஞானிகள், இயக்குனர்கள் இருப்பர்.அந்த அமைப்பு, விண்வெளி திட்டங்களில், தனியாருக்கு அனுமதி அளிப்பது, முறைப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். தனியார், தங்கள் நிதியில், விண்வெளி திட்டத்திற்கு தேவையான, அனைத்து பணிகளையும் மேற்கொள்வர்.உலகளவில், ராக்கெட், செயற்கைக்கோள் சார்ந்த விண்வெளி ஆய்வு துறையின் பொருளாதார சந்தை மதிப்பு, 23 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அதில், இந்தியாவின் பங்கு, 3 சதவீதம் மட்டுமே. தனியாருக்கு அனுமதி அளிப்பதன் வாயிலாக, உலக விண்வெளி சந்தையில், இந்தியாவின் பங்கு மேலும் அதிகரிக்கும்.

ராக்கெட் போன்றவற்றிற்கு பயன்படும் உபகரணங்களை தயாரிக்க, சிறியது, பெரியது என, 500 நிறுவனங்களுக்கு, இஸ்ரோ, 'ஆர்டர்' வழங்குகிறது.ஊரடங்கால், அந்த நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் பணியை மேற்கொள்ள, இஸ்ரோ அதிகாரிகள், நாடு முழுதும் பயணம் செய்ய வேண்டி யுள்ளது. ஊரடங்கால், அந்த பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.

இதனால், இஸ்ரோவின், 'ககன்யான், சந்திரயான் -- 3, எஸ்.எஸ்.எல்.வி.,' உட்பட பல செயற்கைக்கோள்கள் ஏவும் திட்டங்கள் தாமதமாகி வருகின்றன. இயல்பு நிலை திரும்பியதும், இஸ்ரோ வழக்கம் போல், விண்வெளி ஆராய்ச்சி தொழில்நுட்ப பணிகளிலும், திறன் மேம்பாட்டிலும் தீவிரமாக ஈடுபடும். தென்திசை நோக்கி செயற்கைக்கோள்களை செலுத்த, துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் பொருத்தமான இடமாக திகழ்கிறது. அங்கு, ராக்கெட் ஏவுதளம் அமைக்க, நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.தமிழக அரசு நிலத்தை ஒப்படைத்ததும், ஏவுதளம் அமைக்கும் பணி விரைவாக துவக்கப்படும். தனியார் துறைக்கு அனுமதி வழங்குவது போல, மாநில அரசுகள் விருப்பப்பட்டாலும், விண்வெளி துறையில் ஈடுபடலாம்.




50 செயற்கைக்கோள்கள்



விண்வெளி திட்டங்களை செயல்படுத்த, மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும்; மாநில அரசுகள் முன்வந்தால் அனுமதி வழங்கப்படும். தற்போது, விண்வெளியில், இந்தியாவின், 50 செயற்கைக்கோள்கள் பயன்பாட்டில் உள்ளன.அதில், 50 சதவீதம், தகவல் தொடர்புக்கும், மற்றவை புவி கண்காணிப்பு மற்றும் அறிவியல் ஆய்வுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. தனியாருக்கு அனுமதி அளிக்கப்படும் பட்சத்தில், செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.இஸ்ரோவின் ஏவுதளத்தில், இஸ்ரோவின் ராக்கெட்டுகள் மட்டுமே ஏவப்படும். தனியார், ஏவுதளம் அமைக்க தேவையான தொழில்நுட்ப உதவிகள் மற்றும் ஒத்துழைப்பு அளிக்கப்படும். நாட்டின் எல்லை பாதுகாப்பு தொடர்பான ஆய்வு, இஸ்ரோவின் கீழ் வரவில்லை. அந்த பணி, வேறு துறையின் கீழ் வருகிறது. அந்த துறை, எல்லை பாதுகாப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
28-ஜூன்-202013:52:01 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் எப்படி பங்கேற்பு அது தான் தனியாருக்கு தாரை வார்த்துவிட்டீர்களே அப்புறம் எப்படி ஊரோடு ஒத்து வாழ் நீரும் அவர்களுடன் சேர்ந்து வடை வியாபாரம் தொடங்கிவிட்டேர்
Rate this:
Cancel
28-ஜூன்-202010:07:36 IST Report Abuse
ஆப்பு அதுக்கும் மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கணுமே...
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
28-ஜூன்-202008:53:55 IST Report Abuse
Ellamman எந்த மாநில கவர்னர்? திரிபுராவா?? இல்லை நாகாலாண்டா??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X