10 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட சூரியன் புகைப்படத்தை வெளியிட்ட நாசா

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தற்போது சூரியனின் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சூரியனின் போக்கை நாசாவின் செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது.



latest tamil news



இந்த 10 ஆண்டுகளில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை என்ற விகிதத்தில் இந்த செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது. இவ்வாறாக நான்கரை கோடி புகைப்படங்கள் பிடிக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்கள் தொகுக்கப்பட்டு தற்போது ஓர் ஆவணப்படம் போல நாசாவால் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தப் புகைப்படத் தொகுப்பு ஓர் வீடியோ போல காட்சியளிக்கிறது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2010ம் ஆண்டுமுதல் 2020ம் ஆண்டுவரை எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள், சூரியனின் பல ஒளி மாற்றங்கள் மற்றும் பரிணாமங்களைக் காட்டுகிறது.

நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி என்று அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோள் பல ஆண்டுகளாக வெள்ளி கிரகம் மற்றும் சூரியன் ஆகியவற்றை மிகவும் கவனமாக கண்காணித்து வருகிறது.

11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனின் காந்தவிசை மாறும். அப்போது சூரியனின் வட மற்றும் தென் துருவங்கள் எதிரெதிராக மாறும். இந்த புகைப்படங்கள் தற்போது மிக அதிக ரெசல்யூஷனில் தெளிவாக எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது


latest tamil news



இந்தப் புகைப்படத் தொகுப்பு 61 நிமிட வீடியோவாக ஓடுகிறது. இதில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் அனிமேஷன் போல தத்ரூபமாக உள்ளன. இது பார்வையாளர்களை வியக்கவைத்துள்ளது. இந்தப் புகைப்படங்கள் 17.1 நானோமீட்டர் அலைநீளத்தில் எடுக்கப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொழில்நுட்ப கோளாறால் சில படங்கள் பதிவாகாமல் முழுவதுமாக கருப்படித்துக் காட்சி அளிக்கிறது

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
aryajaffna - Zurich,சுவிட்சர்லாந்து
28-ஜூன்-202007:44:40 IST Report Abuse
aryajaffna அமெரிக்காவில் நடக்கும் லக்ச கணக்கண கொரோனா சாவை திசை திருப்ப CIA செய்த Adobe Photoshop .
Rate this:
பிம்பிலிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா
28-ஜூன்-202019:21:37 IST Report Abuse
பிம்பிலிக்கி பிளாப்பி ஆமா அன்னான் தான் அடோபி கம்பெனிக்கு கிராபிக் டிசைனர்...
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
28-ஜூன்-202006:00:03 IST Report Abuse
Nathan அது என்ன புகை படம். மின் படம் என்று மாறுங்கள். ஆமாம், 11.86 வருடங்களுக்கு ஒரு முறை சூரிய குடும்பத்தின் மிகப் பெரிய கிரகமான வியாழன் சூரியனை சுற்றி வரும் , அதற்கும் இந்த துருவ மாற்றத்துக்கும் தொடர்பு உண்டோ? மேலும் வியாழனின் ராசி மற்றம் மிக வலுவான வாழ்முறை மாற்றங்களை மனிதர்களுக்கு ( செடி, கோடி மரங்களுக்கும் கூட ) தருகிறது. குறிஞ்சி, மூங்கில் இவை தெரிந்தவை பரூவ மாற்றம் , பஞ்சம் அதி மழை கூட இந்த 12 வருட வட்டத்தில் வருகிறது. பெரும் யுத்தங்களும் அவ்வாறே .
Rate this:
Cancel
பிம்பிலிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா
27-ஜூன்-202023:31:46 IST Report Abuse
பிம்பிலிக்கி பிளாப்பி இரவு நேரத்தில் எடுத்திருந்தால் இவ்வளுவு தெளிவாக படம் கிடைத்திருக்குமா என்று பப்பு வியந்து நாசாவை (நாராயண சாமியை) பாராட்டினார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X