சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

மாத்தி யோசிக்கும் அமைச்சர்!

Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 மாத்தி யோசிக்கும் அமைச்சர்!

மாத்தி யோசிக்கும் அமைச்சர்!

'இவருக்கு மட்டும் புதிது புதிதாக எங்கிருந்து தான், 'ஐடியா' வருகிறதோ தெரியவில்லை' என, கர்நாடக மாநில விவசாயத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பி.சி.பாட்டீலின் நடவடிக்கைகளை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர், சக அரசியல்வாதிகள். பி.சி.பாட்டீல், அரசியலுக்கு வருவதற்கு முன், கர்நாடகா போலீசில் பணியாற்றினார்; பின், அந்த பணியை ராஜினாமா செய்து, கன்னட சினிமாக்களில் நடித்தார். கடைசியாக அரசியலில் கால் பதித்தார். எந்த துறையில் இருந்தாலும், அந்த துறையில் தனித்து தெரிய வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் உள்ளவர். சமீபத்தில், விவசாயத் துறை அதிகாரிகளுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது, 'விவசாயத் துறை அமைச்சகத்தின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளில் இருந்து, ஊழியர்கள் வரை, தங்கள் மொபைல் போன்களில் அழைப்பு வந்ததும், 'ஹலோ' சொல்வதற்கு பதிலாக, 'ஜெய் கிசான்' என்று தான் சொல்ல வேண்டும்' என, உத்தரவிட்டார்.
'ஜெய் கிசான்' என்றால், தமிழில், 'விவசாயிகள் வாழ்க' என அர்த்தம். அத்துடன், 'மொபைல் போனில், 'ரிங் டோனாக' விவசாயிகளை போற்றி பாடப்பட்ட கன்னட பாடலை வைக்க வேண்டும்' என்றும் உத்தரவிட்டார். அமைச்சரின் இந்த அறிவிப்பு, கர்நாடக மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.'இப்படியே விட்டால், கர்நாடகாவின் அடுத்த முதல்வராகி விடுவார் போலிருக்கிறதே... நாமும் எதையாவது புதிதாக யோசிப்போம்' என, அமைச்சர்கள் எல்லாம், தங்களுக்கு தெரிந்தவர்களிடம் ஆலோசனை கேட்டு
வருகின்றனர்.
'வாயை குறைக்கமாட்டேங்கிறாரே!'

'அரசியல் கட்சிகளிடையே எனக்கு எவ்வளவு கிராக்கி இருக்கிறது தெரியுமா... என்னை அரசியலில் இருந்து யாரும் ஓரம் கட்ட முடியாது' என, தனக்குத் தானே பெருமை அடித்துக் கொள்கிறார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான நவ்ஜோத் சிங் சித்து.கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதும், பா.ஜ., வில் சேர்ந்து, எம்.பி.,யானார். பா.ஜ., மூத்த தலைவர்களுடன் மோதலில் ஈடுபட்டதால் ஓரம் கட்டப்பட்டார். இதையடுத்து, காங்கிரசுக்கு தாவினார். பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசில், இவருக்கு சுற்றுலா துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. சில மாதங்களிலேயே அமரீந்தர் சிங்குடனும் மோதினார். வாய்க்கு வந்தபடி, அவரை திட்டினார். கடுப்பான அமரீந்தர், சித்துவை ஓரம் கட்டினார். தற்போது அமைச்சர் பதவியை இழந்து நடுத்தெருவில் நிற்கிறார். ஆனால், சித்துவின் வாய் ஜம்பம் குறையவில்லை. 'ஆம் ஆத்மி, அகாலி தளம் போன்ற கட்சிகளிடமிருந்து அழைப்பு மேல் அழைப்பு வருகிறது. அமரீந்தர் சிங், என்னை மதித்து திரும்ப அமைச்சர் பதவியை தராவிட்டால், வேறு கட்சிக்கு போய் விடுவேன்' என, பஞ்சாப் மாநில, காங்., பிரமுகர்களிடம் பேசி வருகிறார். காங்., கட்சியினரோ, 'மாதத்துக்கு ஒரு கட்சிக்கு தாவினால், இவரை எந்த கட்சியும் அழைக்காது. சித்துவுக்கு, அவரது வாயால் தான் கெடுதல் ஏற்படுகிறது. எவ்வளவு பட்டாலும் வாயை குறைக்க மாட்டேங்கிறாரே' என, எரிச்சலுடன் பேசுகிறார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
l vijayaraghavan - CHENNAI,இந்தியா
28-ஜூன்-202018:33:59 IST Report Abuse
l vijayaraghavan சித்து போன்றோரால் எந்தக் கட்சிக்கும் பிரெயியோஜனம் கிடையாது. அவரைப் போன்ற ஓட்டை வயர்களை எந்தத் தகுதியின் பேரில் பாய்ந்து பாய்ந்து கட்சிக்குள் பிடித்துப் போடுகிறார்கள் தெரிய வில்லை . முக்கால் வாசி சினிமாக் காரர்களும் இதே ராகம் தான். நம் சத்ருகன் சின்ஹாவையும் பார்த்து விட்டோம். இந்த பிரிவில் உள்ளவர்களின் கண்களை அதீத ரசிகர்களின் பித்தும் பணமும் மறைப்பதால் அவர்கள் பொறுப்புக்கு வந்த பின்னும் பொறுப்பற்று தான் நடந்து கொள்வர். இதை கட்சி தலைவர்கள் உணர வேண்டும். கட்சிக்கு உழைப்பவர்களை அடையாளம் கண்டு கட்சிக்குள் சேருங்கள். இல்லையென்றால் இத்தகைய பிரபலன்களினால் எப்போதும் சங்கடம் தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X