சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

அரண்டு போயிருக்கும், 26 பேர்!

Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
அரண்டு போயிருக்கும், 26 பேர்!''சென்னையில இருந்த, வெளி மாவட்டத்துக்காரங்களை, ஆரம்பத்திலேயே சொந்த ஊருக்கு போக அனுமதிச்சிருந்தா, இந்த அளவுக்கு, 'கொரோனா' பரவிஇருக்காதுங்க...'' என்றபடியே, திண்ணையில் அமர்ந்தார், அந்தோணிசாமி.''விஷயத்துக்கு வாரும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.''சென்னையிலிருந்து, 'இ - பாஸ்' இல்லாம, சொந்த மாவட்டத்துக்கு படையெடுக்குறவங்க
 அரண்டு போயிருக்கும், 26 பேர்!


அரண்டு போயிருக்கும், 26 பேர்!''சென்னையில இருந்த, வெளி மாவட்டத்துக்காரங்களை, ஆரம்பத்திலேயே சொந்த ஊருக்கு போக அனுமதிச்சிருந்தா, இந்த அளவுக்கு, 'கொரோனா' பரவி
இருக்காதுங்க...'' என்றபடியே, திண்ணையில் அமர்ந்தார், அந்தோணிசாமி.''விஷயத்துக்கு வாரும் ஓய்...''
என்றார், குப்பண்ணா.''சென்னையிலிருந்து, 'இ - பாஸ்' இல்லாம, சொந்த மாவட்டத்துக்கு படையெடுக்குறவங்க அதிகமாயிட்டாங்க...
''சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்துல குடியிருந்த பலர், வீடுகளை காலி செஞ்சுட்டு, லாரி, வேன்ல பொருட்கள எடுத்துட்டு, சொந்த ஊர் போயிருக்காங்க...
''இடையில பல, 'செக்போஸ்டு' இருந்தாலும், அவங்களை யாரும் தடுத்து நிறுத்தலைங்க... 'டெஸ்ட்' கூட எடுக்கலைங்க... ஒவ்வொரு மாவட்டத்துலயும், இ - பாஸ் இருந்தா தான், உள்ளே விடுவாங்க...
''ஆனா, செக்போஸ்டுல இருக்குற போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகளை, 'கவனி'ச்சுட்டு, அவங்க போயிக்கிட்டே இருக்காங்க...
''இப்படி செய்தா, ஏன் கொரோனா பரவாது...'' என வருத்தப்பட்டார், அந்தோணிசாமி.
''இப்போதைக்கு, 26 பேர் அரண்டு போயிருக்கா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.
''என்ன விஷயம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர்கிட்ட, பணத்தையும், 'போலி அப்ரன்டிஸ்' அனுபவச் சான்றும் கொடுத்து, எம்.டி.சி.,ல, உதவி இன்ஜினியரா, 26 பேர், வேலைக்குச் சேர்ந்தா ஓய்...
''அவாளுக்கு உதவின அதிகாரி தான், இப்போ,
எம்.டி.சி.,யோட உயர் அதிகாரியா இருக்கார்... இருந்தாலும், முறைகேடு பத்தி விசாரிச்ச விஜிலென்ஸ், மூணு பேரை கண்டுபிடிச்சு நடவடிக்கை
எடுத்துருக்கு...''இப்போ, போலி சான்று கொடுத்து சேர்ந்த, 26 பேரையும் கண்டுபிடிச்சுட்டா... அதனால, 26 பேரோட, அவாளுக்கு உதவின, உயர் அதிகாரிகளுக்கும் வயிறு கலங்கறது ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''நெடுஞ்சாலை அலுவலகங்கள் வெறிச்சோடி கிடக்குது பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.''எதுக்கு வே...'' எனக் கேட்டார்,
அண்ணாச்சி.''மதுரை, புதுார் தாமரை தொட்டி பஸ் ஸ்டாப் பக்கத்துல, மாநில நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு, செயற்பொறியாளர் அலுவலகங்கள் இருக்கு... ரேஸ்கோர்சிலும், நெடுஞ்சாலை உதவி பொறியாளர் அலுவலகம் இருக்கு பா...
''கடந்த, 8ம் தேதி, காளவாசல் சந்திப்பு பாலத்தை, 'வீடியோகான்பரன்ஸ்' வழியா, முதல்வர் இ.பி.எஸ்., திறந்து வைச்சார்...
''இதுக்காக, அதுக்கு முதல் நாள், சென்னைக்கு வந்துட்டு போன பொறியாளர் ஒருத்தருக்கு, 'கொரோனா' தொற்று வந்துருக்கு பா...''அவர்கிட்ட இருந்து, குடும்பத்தினர் மட்டுமில்லாம, சில பொறியாளர்களுக்கும் நோய் பரவியிருக்கு... இதனால, நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்துக்கு போகவே, ஒப்பந்ததாரர்கள், ஊழியர்கள் பயப்படுறாங்க... சாதாரண நாள்ல, அந்த அலுவலகம், களை கட்டியிருக்கும்... இப்போ, வெறிச்சோடி கிடக்குது பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
நண்பர்கள் கிளம்ப, திண்ணை வெளிச்சோடியது.


பிடித்து கொடுத்த மணல் லாரிகளை விடுவித்த அதிகாரி!''திராவிடக் கட்சிகள் மாதிரியே, இவங்களும் மாறிட்டு இருக்காவ வே...'' என, தன் வீட்டில் கூடிய நண்பர்களுக்கு, கபசுர குடிநீர் வழங்கியபடியே, விவாதத்தை ஆரம்பித்தார், பெரியசாமி
அண்ணாச்சி.
''எந்தக் கட்சியைச் சொல்றீங்க...'' எனக் கேட்டார்,
அந்தோணிசாமி.
''மதுரையில, திராவிடக் கட்சி நிகழ்ச்சிகள் எது நடந்தாலும், கறி விருந்துக்கு பஞ்சமிருக்காதுல்லா... இப்ப, பா.ஜ.,வினரும் அந்த பாணியில இறங்கிட்டாவ...
''கொரோனா ஊரடங்கை முன்னிட்டு, திராவிடக் கட்சிகளுக்கு போட்டியா, மதுரை, பா.ஜ.,வினரும் நிவாரண உதவிகளை வழங்குனாவ வே...
''நிவாரணம் வழங்கிய கட்சி நிர்வாகிகளை குஷிப்படுத்த, மாவட்ட துணை தலைவர் ஹரிச்சந்திரன், சமீபத்துல கறி விருந்து குடுத்திருக்காரு...
''ஊரடங்கால, ஆர்ப்பாட்டம் இல்லாம, வீட்டு மொட்டை மாடியிலயே விருந்தை நடத்தியிருக்காரு... கூட்டணிக் கட்சிங்கிற முறையில, அ.தி.மு.க., நிர்வாகிகளும் கலந்துக்கிட்டாவ வே...'' என்றார் அண்ணாச்சி.
''மாவட்டச் செயலரின் முயற்சி, தோல்வியில முடிஞ்சுடுத்து ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.
''எந்தக் கட்சி விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''ஈரோடு மாநகர் மாவட்ட, அ.தி.மு.க., செயலரா இருக்கிறவர், எம்.எல்.ஏ., ராமலிங்கம்... முன்னாள் அமைச்சராகவும் இருந்தார் ஓய்...
''இவரது கட்டுப்பாட்டுல, ஏழு பகுதிச் செயலர்கள் இருக்கா... சமீபத்துல, மாநகர நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி, ஏழு பகுதிச் செயலர்களை, 11 ஆக உயர்த்த ஆலோசனை நடத்தியிருக்கார் ஓய்...
''இதுக்கு, சில பகுதிச் செயலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிச்சிருக்கா... இப்பிரச்னை முதல்வர் கவனத்துக்கும் போயிருக்கு ஓய்... அவரோ, 'இப்போதைக்கு புதிய பதவிகள் எதுவும் வேண்டாம்'னு சொல்லிட்டார்...
''இதனால, 'தனக்கு வேண்டியவாளுக்கு பதவி வழங்க, மாவட்டச் செயலர் போட்ட திட்டம் பலிக்காம போயிடுத்து'ன்னு, அவரது எதிர் கோஷ்டியினர் சொல்றா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''இந்த போலீஸ் ஸ்டோரியை கேளுங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு, சமீபத்துல புது போலீஸ் அதிகாரி வந்தாரு... ராத்திரி ரோந்து போனவர், 'பர்மிட்' இல்லாம, மணல் ஏத்திட்டு வந்த நாலு லாரிகளை மடக்கி, டிரைவர்களையும்
பிடிச்சாரு பா...''மணல் லாரிகளை பிடிச்ச இடம் ஒரத்தநாடு சரகம்கிறதால, அந்த பகுதி போலீசாரிடம் எல்லாத்தையும் ஒப்படைச்சு, வழக்கு போடும்படி சொல்லிட்டு போயிட்டாரு... ஆனா, பறிமுதலான லாரிகள் எல்லாம், திருவாரூர் மாவட்ட ஆளும்கட்சி பிரமுகருக்கு சொந்தமானதாம் பா...
''இதனால, வழக்கு பதிவு பண்ணாம, லாரிகளை எல்லாம், ஒரத்தநாடு சரக
அதிகாரி விடுவிச்சிட்டாரு... இதைக் கேள்விப்பட்ட, பட்டுக்கோட்டை அதிகாரி நொந்து போயிட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய்.
மொபைல் போனுடன் ஓடி வந்த அண்ணாச்சியின் பேத்தி, ''தாத்தா... புகழேந்தி கணேஷ், லைன்ல இருக்கார்...'' எனக் கொடுத்தாள்.
போனை வாங்கிய அண்ணாச்சி, ''இந்த செங்கமலக் கண்ணன், ஏன் தம்பி இப்படி செஞ்சாரு...'' எனப் பேசத் துவங்க, நண்பர்கள் கிளம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கிரி அனகை. சென்னை. - சென்னை..,இந்தியா
28-ஜூன்-202007:21:10 IST Report Abuse
கிரி அனகை. சென்னை. ஆளும்கட்சி பிரமுகருக்கு சொந்தமானதை பிடித்ததே தப்பு ஆச்சே ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X