பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 இதே நாளில் அன்று

ஜூன், 28, 1995

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடுகம்பட்டி என்ற கிராமத்தில், தங்கவேல் - சரோஜா தம்பதிக்கு, 1995 ஜூன் 28ம் தேதி பிறந்தவர், மாரியப்பன். இவரது பெற்றோர், செங்கல் சூளையில் வேலை செய்து வருகின்றனர்.மாரியப்பன், தன், 5வது வயதில், பள்ளிக்கு சென்றபோது, லாரி மோதியதில், வலது கால் நசுங்கியது. கால் ஒன்றை இழந்தாலும், மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டியில், ஆர்வமுடன் ஈடுபட்டார். மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற, உயரம் தாண்டுதல் போட்டியில் வெற்றி பெற்றவர், 2012ம் ஆண்டு முதல், சர்வதேச போட்டிகளில் பங்கேற்று, சாதனை படைக்கத் துவங்கினார். கடந்த, 2016ல், பிரேசிலின், ரியோடி ஜெனிரோவில் நடந்த, பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்று, ஒற்றைக் காலின் வலிமையில், 1.89 மீ., உயரத்தைத் தாண்டி, தங்கப்பதக்கம் வென்றார். 'அர்ஜுனா, பத்மஸ்ரீ' உள்ளிட்ட விருதுகள், இவருக்கு அளிக்கப்பட்டுள்ளன.'தங்க மகன்' மாரியப்பன் பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X