என்ன தொடர்பு?

Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
என்ன தொடர்பு?

அந்தமான் தீவுகளில், சுனாமி நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, பிரதமர் நிவாரண நிதியிலிருந்து, ராஜிவ் அறக்கட்டளைக்கு நிதி பெறப்பட்டது. ஆனால், இந்த விஷயத்துக்கும், சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு உள்ளது. இந்த ரூபாயை திரும்ப தந்து விட்டால், சீனா ஆக்கிரமித்த நம் நிலப் பரப்பை, பிரதமர் மோடி திரும்ப மீட்டு தருவாரா?

சிதம்பரம், மூத்த தலைவர், காங்.,

இரட்டை தாக்குதல்!

தற்போது சர்வதேச சமுதாயம், கொரோனா வைரஸ் மற்றும் தவறான தகவல்களை பரப்புதல் ஆகிய இரட்டை தாக்குதல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை சவால்களை முறியடிக்க, அறிவியல் ரீதியான அணுகுமுறைகளை பலப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஜெய்சங்கர், வெளியுறவு அமைச்சர், பா.ஜ.,

போரில் வெல்வோம்!

கொரோனா வைரசுக்கு எதிராக, டில்லி அரசு கடுமையான போரை நடத்தி வருகிறது. கடந்த ஒரு மாதமாக மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தினமும், 20 ஆயிரம் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. கண்டிப்பாக இந்த போரில் வெல்வோம்.

அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி முதல்வர், ஆம் ஆத்மி

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthu - Nagaipattinam,இந்தியா
03-ஜூலை-202009:52:01 IST Report Abuse
Muthu ப. சிதம்பரம் அவர்களே யாரிடம் காது குத்துகிறீர்கள்..?? சீன அரசின் கம்யூனிச கட்சியிடம் இருந்து பல மில்லியன்கள் ரொக்கமாக 07-08-2008 ல் ராகுல் போட்ட கையெழுத்துக்குப்பின் ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு வந்துள்ளது. அதைவிட பெரிய விஷயம், அந்த கையெழுத்து இந்திய பாராளுமன்ற உறுப்பினரான ராகுல் போட்டதால் அவர் என்ன கடிதத்தில் கையெழுத்து போட்டார் என சொல்லவேண்டும். ஆனால் இன்று வரை சொல்ல வில்லை. பணப்பட்டுவாடா இருக்கின்ற காரணத்தால் உங்களை அந்த விஷயத்தில் கூட்டு சேர்த்துக் கொள்ள சோனியா, ராகுல் முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது. அப்படி என்ன அந்த கடிதத்தில் எழுதி கொடுத்தீர்கள்? இதுவரை காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு கூட தெரியாததால் பல காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூட வருத்தத்தில் உள்ளனர். அவர்கள் சொல்வது நீங்கள் முவரும் சேர்ந்து இந்தியாவை சீனாவிற்கு விற்று விட்டீர்கள் என குற்றம் சுமத்தினால் உங்கள் பதில் என்ன? இதனாலேயே அனைத்து காங்கிரஸ் மூத்த தலைவர்களும், அந்த கடிதத்தின் நகல் கிடைக்கும் வரை நாம் பிஜேபி யை மட்டும் ஆதரித்து அவர்களுக்கே நம் ஓட்டை செலுத்துவோம், என முடிவு எடுத்து த்விட்டேர்ல் போட்டும், நீங்கள் அது பற்றி பேசாதது ஏன்?? இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த நேரு குடும்பம் எங்கே? தேச துரோக செய்ய துணியும் சோனியா ராகுல் சிதம்பரம் எங்கே?? மறந்து விடாதீர்கள். தேச துரோகம் உங்கள் சந்ததிகள் மீது பாவமாக விடியும். தெரியும் தானே???
Rate this:
Cancel
Santhosh Kumar - Chennai,இந்தியா
02-ஜூலை-202011:42:00 IST Report Abuse
Santhosh Kumar பிரதமர் நிவாரண நிதிக்கும் அந்தமான் சுனாமி நிவாரணத்துக்கு சம்பந்தம் உள்ளது சரி? அது ராஜீவ் காந்தி அறக்கட்டளை மூலமாக செய்ய வேண்டிய நிர்பந்தம் என்ன? கேப்பையில் நெய் வடிகிறது என்று சொன்னால், ஆமாம் ஆமாம் அதனுடன் சர்க்கரையும் விழுகிறது, கலந்து மாவு பிடுத்து சாப்பிட என்று சொல்ல வேண்டுமோ? இந்தியர்கள் கேனயர்களாக இருக்கும்வரை இப்படித்தான் காங்கிரஸ் காரர்கள் ஏமாற்றுவார்கள். இருநூறு ரூபாய்க்கு விலை போகும் தமிழர்களை சொல்லவேண்டும் . உண்மையில் சீனாவிற்கு இந்திய நிலத்தினை தாரை வார்த்து கொடுத்தது (சீனா மட்டுமல்ல கச்சத்தீவையும் தாரைவார்த்தது) காங்கிரஸ் என்ற கேடு கேட்ட கட்சிதான் என்பதுதான் நிதர்சன உண்மை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X