பொது செய்தி

இந்தியா

என்ன செய்வது என்றே தெரியவில்லை!

Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 என்ன செய்வது என்றே தெரியவில்லை!

நாட்டின் முக்கிய சர்க்கஸ் நிறுவனங்களில் ஒன்றான, 'ராம்போ சர்க்கஸ்' நிறுவனத்தை நடத்தி வரும், சுஜித்: இந்த காலகட்டத்தில், சர்க்கஸ் தொழிலுக்கு அதிக வரவேற்பு இல்லை. எனினும், குழந்தை களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகவும், எங்கள் தந்தையின் தொழில் என்பதற்காகவும் இதை, பல சிரமங்களுக்கு இடையே தொடர்ந்து செய்து வருகிறோம்.

எங்களிடம் எப்போதும், குறைந்தது, 100 பேர் இருப்பர். இதுபோக, குதிரை, நாய்கள், மாடுகள் என, 20க்கும் குறையாத விலங்குகளும் உண்டு. மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும், ஒரு நாள் உணவுக்கு, குறைந்தபட்சம், 20 ஆயிரம் ரூபாய் செலவு ஆகும்.மார்ச் மாதத்தில் மஹாராஷ்டிராவில், சர்க்கஸ் போட தயாரானோம். மார்ச், 24லிலேயே, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து விட்டனர். அதற்கு சில மாதங்களுக்கு முன், அவுரங்காபாத் பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில், கூடாரம் பாதிக்கப்பட்டது. அதன் பின், புனே வந்த பிறகும், பலத்த மழையால், தொழிலே நடக்கவில்லை.நவிமும்பை நிகழ்ச்சியை தான் நம்பிக் கொண்டிருந்த போது, ஊரடங்கு வந்ததால், மிகவும் சிரமப்பட்டோம். எங்கள் நிலை அறிந்த, தேசியவாத காங்., தலைவர் ஒருவர், சில லட்ச ரூபாய் கொடுத்து உதவினார். எங்களிடம், அசாம், நாகாலாந்து, கேரளா என, பல மாநிலங்களைச் சேர்ந்த பணியாளர்கள் இருந்தனர்.

அவர்களை கொஞ்சம், கொஞ்சமாக அவரவர் ஊர்களுக்கு அனுப்பினோம். ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டாலும், இன்னும், சில மாதங்களுக்கு தொழிலை செய்ய முடியாது என்பதால், பிரதமர் மோடி உட்பட அரசியல் தலைவர்கள் பலருக்கும் கடிதம் எழுதி, காப்பாற்றுமாறு வேண்டினோம்.கலைஞர்கள் என்றதும், சினிமா, நாடகக் கலைஞர்களைத் தான் காப்பாற்ற முன்வந்தனர். சர்க்கஸ் கலைஞர்களை யாரும் காப்பாற்றவில்லை.

ஆனால், மஹாராஷ்டிரா மக்கள், தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி, இப்போது வரை, பசி இல்லாமல் சாப்பிட உதவி வருகின்றனர்.எங்களுக்கு, அங்குள்ள சீக்கிய வழிபாட்டுத்தலமான குருத்வாராக்களில், இலவசமாக சாப்பாடு போடுகின்றனர். கால்நடைகளுக்கு தேவையான உணவுகளை, சிலர் மொத்தமாக கொண்டு வந்து கொடுத்து விட்டனர்.

சில அதிகாரிகள், பல ஆயிரம் ரூபாயை, எங்கள் வங்கிக் கணக்குக்கு மாற்றி, தங்களின் தாராள குணத்தை மெய்ப்பித்தனர். அவர்களால் தான், இப்போதும், 50க்கும் மேற்பட்ட நாங்கள் பசி, பட்டினி இன்றி உயிருடன் உள்ளோம்.சில ஆண்டுகளுக்கு முன் வரை, 80க்கும் மேற்பட்ட சர்க்கஸ் நிறுவனங்கள் இருந்தன. இப்போது, நான்கைந்து தான் உள்ளன. அவற்றையும், ஊரடங்குக்கு பின், தொடர்ந்து நடத்த முடியுமா என்ற சந்தேகம் எழுகிறது; என்ன செய்வது என்றே தெரியவில்லை!

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
28-ஜூன்-202008:42:17 IST Report Abuse
Ramachandran Rajagopal பிரதமர், அமைச்சர்கள், அதிகாரிகளுக்கெல்லாம் எழுதுவது என்பது இந்த நாட்டில் செவிடன் காதில் சங்கு குத்துவதற்கு ஒப்பாகும். ஒட்டு வங்கியை குறிவைத்து ஆட்சிகள் நடப்பதால் சில நபர்கள் சாவதை ஒரு பொருட்டாக கொள்ளமாட்டார்கள். லட்சக் கணக்கானவர்கள் கூடி போராடினால் அவர்கள் வாக்குகளை கவர சில ஆயிரம் கொடுப்பார்கள். அதெல்லாம் யானை பசிக்கு சோள பொறி போன்றதாகும். தெய்வமாக மனம் வைத்துக் காப்பாற்றினால்தான் உண்டு. அதற்கு அகங்காரம் அகல வேண்டும் என்பதோடு நன்கு வாழ்ந்த காலத்தில் நாம் யாருக்காவது உதவி செய்திருக்க வேண்டும்.
Rate this:
Cancel
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
28-ஜூன்-202007:52:51 IST Report Abuse
Srinivasan Rangarajan என்ன செய்வது என்று தெரியவில்லை ...... உங்களுக்கு மட்டுமா..... அரசுக்கு ..... எதிர் கட்சிகளுக்கு.....மக்களுக்கு .....மாணவர்களுக்கு .... ஆனால் எல்லோரையும் நன்கு வச்சு செய்யுது கொரோனா .....
Rate this:
Cancel
Rajesh - Delhi,இந்தியா
28-ஜூன்-202004:53:11 IST Report Abuse
Rajesh விலங்குகளை வைத்து நடத்தும் சர்கஸ் கண்டிப்பாக இழுத்து மூடப்பட்டு அந்த விலங்குகளை மீள் குடிஅமர்த்தவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X