சவுதியில் மேலும் புதிதாக 3,927 பேருக்கு கொரோனா| Dinamalar

சவுதியில் மேலும் புதிதாக 3,927 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020
Share

ரியாத் : கொரோனா தொற்று அதிகரித்து சவுதி அரேபியாவில் புதிதாக 3,927 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 37 பேர் பலியாகினர் என அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சவுதி அரேபியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் அதனை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசும் பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று புதிதாக 3,927 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். மொத்தமாக நாட்டின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,78,504 ஆக அதிகரித்தது. மேலும் நோய் தொற்றால் 37 பேர் பலியாகினர். சவுதியில் மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,511 ஆக உயர்ந்தது.


latest tamil news



நாட்டின் நோய் தொற்றுக்கு இன்று மேலும், 1,657 பேர் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,22,128 ஆக உள்ளது. தற்போது நோய் பாதிப்புகளில் சிக்கி 54,865 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். ரியாத்தில் இன்று 181 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் அங்கு மொத்த பாதிப்புகளில் 585 பேருடன் ரியாத் முதலில் உள்ளது. அதற்கடுத்து, 408 பேர் பாதிப்புகளுடன் மெக்கா 2 வது இடத்திலும், 399 பேர் பாதிப்புடன் தம்மம் 3 வது , 234 பேர் பாதிப்புகளுடன் அப்ஹா 4 வது இடத்திலும் , 209 பேர் பாதிப்புடன் கமீஸ் முஹைத் அடுத்த இடத்திலும் உள்ளன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X