பொது செய்தி

இந்தியா

டில்லியை முற்றுகையிட்டுள்ள வெட்டுக்கிளிகள் தலைநகரை காப்பாற்ற உச்சகட்ட கண்காணிப்புகள்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 டில்லியை முற்றுகையிட்டுள்ள வெட்டுக்கிளிகள் தலைநகரை காப்பாற்ற உச்சகட்ட கண்காணிப்புகள்

தலைநகர் டில்லி, கொேரானாவின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், வெட்டுக்கிளிகளின் படையெடுப்பும், வெகு அருகில் வந்து நிற்பதால், அங்கே, உச்சகட்ட கண்காணிப்பும், அதிரடி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

டில்லிக்கு அருகில் தான் உத்தர பிரதேசம், ஹரியானா மாநிலங்கள் அமைந்துள்ளன. இநற்றைச் சேர்ந்த குருகிராம், நொய்டா நகரங்களும், டில்லியும் இணைந்து, 'நேஷனல் கேபிடல் ரீஜன்' அதாவது, என்.சி.ஆர்., என, அழைக்கப்படுகிறது. இந்நிலையில், குருகிராம் நகரத்தில், நேற்று காலை, 11:00 மணியளவில், வெட்டுக்கிளிகள் படையெடுத்தன. உடனடியாக மாவட்ட நிர்வாகம், 'பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்; வீட்டின் கதவு, ஜன்னல்களை மூடவும்' என, அறிவிப்பு செய்தது.

வெட்டுக்கிளிகள், குடியிருப்புகளை மட்டுமல்லாது, மரங்கள், செடிகள், மொட்டை மாடிகள் என, அனைத்தையும் மூடி மறைத்துள்ளன. எல்லையோர நகரம் என்பதால், டில்லியின் உயரமான கட்டடங்களிலிருந்து, இதைக்காண முடியும். இதனால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டு, வெட்டுக்கிளிகள் எந்நேரமும் டில்லிக்குள் நுழையலாம் என்ற அச்சம் கிளம்பியுள்ளது.அபாயம்டில்லி துணை முதல்வர் சிசோடியா, சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் ஆகியோர் தலைமையில், அதிகாரிகள் ஆலோசனையில் இறங்கினர்.

டில்லியின் தென்மேற்கு பகுதியில் உள்ள, 70க்கும் அதிகமான விவசாய கிராமங்களை காப்பாற்றுவது குறித்தும் ஆராய்ந்தனர்.பாகிஸ்தான் வழியாக, ராஜஸ்தானுக்குள் நுழைந்து சேதப்படுத்திய இந்த வெட்டுக்கிளிகள், குஜராத், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் மஹாராஷ்டிரா மாநிலங்களை பதம் பார்த்துவிட்டு, தற்போது டில்லியை சூழ்ந்து நிற்கின்றன.வெட்டுக்கிளிகள் இன்றோ, நாளையோ, டில்லிக்குள் நுழையும் அபாயம் நிலவுகிறது.

இதனால், டில்லி நகரத்தை காப்பாற்றம் நடவடிக்கையாக, ட்ரோன்கள், ஹெலிலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.இவற்றின் மூலம் மருந்துகள் தெளிப்பது, பலத்த சத்தம் எழுப்பி விரட்டியடிப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதற்காக, மத்திய அரசும் தயார் நிலையில் உள்ளதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X