பொது செய்தி

இந்தியா

உலகின் மிகப்பெரிய கொரோனா மருத்துவமனை: அமித்ஷா நேரில் ஆய்வு

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டில்லியில் 10 ஆயிரம் படுக்கைகளுடன் தயாராகி வரும் உலகின் மிகப்பெரிய மருத்துவமனையினை உள்துறை அமைச்சர் அமித்ஷா, டில்லி முதல்வருடன் இன்று (ஜூன் 27) நேரில் சென்று ஆய்வு செய்தார்.



latest tamil news


தலைநகர் டில்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த நிலையிலேயே உள்ளது. இந்நிலையில், நோய் பரவல் பற்றி ஆராய மக்களிடையே ரத்ததில் ஆன்டிபாடிகளை கண்டறியும் சீராலஜி பரிசோதனையை டில்லி அரசு துவக்கியுள்ளது.

மற்றொரு பெரிய முயற்சியாக தெற்கு டில்லியின் சத்தர்பூர் பகுதியில் சர்தார் படேல் கோவிட் பராமரிப்பு மையம் மற்றும் மருத்துவமனையை அமைத்து வருகின்றனர். உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தோ திபெத்திய எல்லை காவல்துறை நிர்வாகம் இப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூன் 27) அந்த ஏற்பாடுகளை பார்வையிட்டார்.


latest tamil news


ராதா சோமி சத்சங் பியாஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்த சிறப்பு மருத்துவமனை இரண்டு பிரிவுகளை கொண்டது. கொரோனா பராமரிப்பு மையத்தில் அறிகுறி அற்ற கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்படுவார்கள். மருத்துவமனையில் அறிகுறி உள்ள நோயாளிகள் சிகிச்சை பெறுவார்கள். தற்போது 2 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அவை திங்களன்று திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஜூன்-202022:59:40 IST Report Abuse
ஆரூர் ரங் தப்லீக்கின் சீரிய 😥 பணி😥
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-ஜூன்-202022:27:25 IST Report Abuse
தமிழ்வேல் அப்பாடா, இப்போதான் தல ஒன்னு வெளியே வருது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X