சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடகு கடை உரிமையாளரை தாக்கி ரூ.3 லட்சம் மதிப்பில் நகை திருட்டு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

பெண்ணாடம் : விருத்தாசலம் அருகே அடகுக்கடை உரிமையாளரை தாக்கி, ரூ. 3 லட்சம் மதிப்பிலான நகை, பணம் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி, ஆண்டிமடம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் இளவரசன், 45; அதே பகுதியில் நகை அடகுக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடை சாவி வைத்துள்ள பையை மற்றொரு அறையில் வைத்து விட்டு மனைவியுடன் துாங்கச் சென்றார்.அப்போது, இரவு 2:30 மணியளவில் இரு மர்ம நபர்கள், நடமாடிய சத்தம் கேட்டு எழுந்து, கூச்சலிட்டு அவர்களை தடுத்தார். திருடர்கள், அவரை இரும்பு பைப்பால் தாக்கி விட்டு, தப்பிச் சென்றனர்.உள்ளே சென்று பார்த்த போது, கடை சாவி, லாக்கர் சாவி, ஐந்தரை சவரன் நகை, ரூ.50 ஆயிரம் வைத்திருந்த பையை காணவில்லை.

கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர்.கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து நகை, பணம் திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். நகை அடகுக்கடை உரிமையாளரை தாக்கி நகை, பணம் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X