பொது செய்தி

தமிழ்நாடு

கடலுார் -கம்மாபுரம் இடையேஅரசு பஸ் இயக்க கோரிக்கை

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

கம்மாபுரம் : கடலுாரிலிருந்து ஊ.கொளப்பாக்கம் வழியாக கம்மாபுரம் வரை அரசு பஸ் இயக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கம்மாபுரம் ஒன்றியத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மாணவ, மாணவிகள், தனியார் மற்றும் அரசு அலுவலக ஊழியர்கள் 1,000க்கும் மேற்பட்டோர் விருத்தாசலம், நெய்வேலி, கடலுார் உட்பட பல பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர். மேலும், கம்மாபுரத்திலுள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பணிபுரிபவர்கள் கடலுார் உள்ளிட்ட இதர பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.அவர்கள், கடலுார் செல்வதற்கு, 15 கி.மீ., துாரமுள்ள விருத்தாசலம் சென்று மாற்று பஸ் மூலமே கடலுார் செல்லமுடியும். இதனால் கால விரையம் ஏற்படுவதுடன், போக்குவரத்து செலவும் அதிகமாகிறது.

எனவே, கம்மாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில், கடலுாரிலிருந்து நெய்வேலி, ஊ.கொளப்பாக்கம், வி.குமாரமங்கலம் வழியாக கம்மாபுரம் வரை அரசு பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X