பொது செய்தி

தமிழ்நாடு

அரசு போக்குவரத்து கழகங்களின் ஓய்வூதியர்கள் பிரச்னை தீருமா?

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

சென்னை; அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, இந்த ஆண்டு ஓய்வு இல்லை என்பதால், ஓய்வூதியர்களின் பிரச்னைகளாவது தீர்க்கப்படுமா என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற, ஊழியர்களின் குடும்ப ஓய்வூதிய பிரச்னைகள், ஓய்வூதிய நிலுவைகள், அகவிலைப்படி உயர்வு என, பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. ஓய்வு பெறும் வயதை, அரசு ஓராண்டு உயர்த்தியதால், அரசு போக்குவரத்து கழகங்களில், இந்த ஆண்டு யாருக்கும் ஓய்வு இல்லை.

எனவே, ஏற்கனவே உள்ள ஓய்வூதியர்களின் பிரச்னைகளை தீர்க்கப்படலாம் என, ஓய்வூதியவர்கள் நம்பிக்கை தெரிவித்துஉள்ளனர்.இதுகுறித்து, போக்குவரத்து கழக ,ஓய்வூதியர் சங்கங்களின் செயலர், கர்சன் கூறியதாவது:இந்தாண்டு பணி ஓய்வு பெறுவோர் இல்லாததால், உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டிய அவசியம், அரசுக்கு இல்லை.

எனவே, ஏற்கனவே ஓய்வு பெற்ற, எங்களை போன்றவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகைகள், உடனடியாக வழங்கப்பட வேண்டும். மருத்துவப்படி உயர்வு, குடும்ப ஓய்வூதியம், மருத்துவ காப்பீட்டுத் திட்டம், குடும்ப பாதுகாப்பு நிதி உள்ளிட்ட, எங்களின் கோரிக்கை குறித்து, அரசு பரிசீலிக்க வேண்டும். இதுகுறித்து, ஓய்வூதிய பொறுப்பாட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X