பொது செய்தி

தமிழ்நாடு

சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

சென்னை; பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதால், 34 ஆயிரம் டன் தரமான விதைகள், கையிருப்பில் வைக்கப்பட்டு உள்ளன.கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும், வேளாண் பணிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு அணைகளில் இருந்து, பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இதனால், விவசாயிகள் உற்சாகம் அடைந்துஉள்ளனர்.நெல் உள்ளிட்ட உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் சாகுபடியில், அவர்கள் கவனம் செலுத்த துவங்கிஉள்ளனர். கொரோனா பாதிப்பால், முக்கிய நகரங்களில் வசித்தவர்கள் பலர், சொந்த ஊர்களுக்கு திரும்பி, குடும்பத்தினர், நண்பர்களுடன் இணைந்து, சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மாநிலம் முழுதும் சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என, வேளாண் துறையினர் நம்புகின்றனர்.

விவசாயிகள், தரமற்ற விதைகளை பயன்படுத்துவதால், மகசூல் குறையும்; நஷ்டம் ஏற்படும். எனவே, தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அரசு வேளாண் விரிவாக்க மையங்களில், 23 ஆயிரத்து, 80 டன் விதைகள், இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.தனியார் விற்பனை நிலையங்களில், 11 ஆயிரத்து, 116 டன் விதைகள் இருப்பு உள்ளன.இதில், வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாக, இதுவரை, 2,486 டன் விதைகள், விவசாயிகளுக்கு மானிய விலையில் விற்கப்பட்டுள்ளன. விதை தேவையுள்ள விவசாயிகள், வேளாண் விரிவாக்க மையங்களில் பெறலாம் என, வேளாண் துறையினர் அறிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X