பொது செய்தி

தமிழ்நாடு

சுடுகாட்டு சாலை பணி: எம்.எல்.ஏ., ஆய்வு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

புவனகிரி : புவனகிரி அருகே தம்பிக்குநல்லாண்பட்டினத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அமைக்கப்படும் சுடுகாட்டு சாலை குறித்து எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.

புவனகிரி அருகே தம்பிக்குநல்லாண்பட்டினம் கிராமம், புவனகிரி பேரூராட்சி, ஆதிவராக நல்லுார் மற்றும் ஆயிபுரம் ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள இந்த கிராமத்தில் சுடுகாட்டுக்கு சாலை இல்லாமல், கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் வயல் மற்றும் ஆற்றில் இறங்கி பிணத்தை சுமந்து செல்கின்றனர். இந்நிலையில், விவசாயிகள் 25 பேர் தாமாக முன் வந்து, சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடத்தை, சுடுகாட்டு சாலை அமைக்க தானமாக ஆதிவராக நல்லுார் ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

பின்னர், ஊராட்சித் தலைவர் ஜோதிநாகலிங்கம், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் முதற்கட்டமாக ரூ.1.50 லட்சம் செலவில் அரை கி.மீ., தொலைவிற்கு 15 மீட்டர் அகலம், அரை மீட்டர் உயரத்தில் சாலை அமைக்கும் பணியை துவக்கினார். இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.நேற்று பாண்டியன் எம்.எல்.ஏ., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகள் குறித்து ஊராட்சித் தலைவர் ஜோதிநாகலிங்கம், பி.டி.ஓ.,க்கள் சிவஞானசுந்தரம், அசோக்பாபு விளக்கமளித்தனர். முன்னாள் அமைச்சர் செல்விராமஜெயம், சேர்மன் கருணாநிதி, ஒன்றிய செயலர் அசோகன், தொழில் நுட்ப அணி பொருளாளர் சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X