பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு ஆலோசனை

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

கமுதி:கமுதியில் வேளாண் விரிவாக்க திட்டத்தின் கீழ், மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் குறித்து விவசாயிகளுக்கு, தொழில்நுட்ப ஆலோ சனை கூட்டம், வட்டார வேளாண் உதவி இயக்குனர் கெர்சோன் தங்கராஜ் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் மழை பெய்யும் போது, உழவு பணிகளை மேற்கொண்டு, ஒரு ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம்புண்ணாக்கு இடவேண்டும். ஒரு கிலோ மக்காச்சோள விதைகளை 10 கிராம் என்ற அளவில் பெவேரியா பேசியானா மருந்து கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைப்பு பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொண்டு, வரப்பு ஓரங்களில் சூரியகாந்தி, தட்டைப்பயறு நடவு செய்து, 10 வரிசைகளுக்கு ஒரு வரிசை உளுந்து, பாசிப்பயறுகளை சாகுபடி செய்து, அந்து பூச்சிகளை கட்டுப்படுத்த விளக்கு பொறி வைக்க வேண்டும் என, வேளாண் இணை இயக்குனர் ேஷக் அப்துல்லா, மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் ஆலோசனை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X