பொது செய்தி

தமிழ்நாடு

மின் கட்டணம் வசூல் ரூ.1,600 கோடி

Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை; ஊரடங்கால், தொழிற்சாலைகள் செயல்படாதது, மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கியது உள்ளிட்ட காரணங்களால், மின் வாரியத்திற்கு, மே மாதம், மின் கட்டணம் வாயிலாக, 1,600 கோடி ரூபாய் மட்டுமே, வருவாய் கிடைத்துள்ளது.

தமிழகத்தில், வீடுகள் உட்பட, அனைத்து பிரிவுகளுக்கும், அரசு நிறுவனமான, மின் வாரியம் மட்டுமே, மின் வினியோகம் செய்கிறது. மொத்தம் உள்ள, 3.03 கோடி நுகர்வோரில், இலவச திட்ட பயனாளிகள் போக, சராசரியாக, 1.90 கோடி பேர் மின் கட்டணம் செலுத்துகின்றனர்.வீடுகளுக்கு, இரு மாதங்களுக்கு ஒரு முறையும்; தொழிற்சாலைகளுக்கு, மாதம் தோறும் மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. மின் கட்டணம் வாயிலாக, மாதம் சராசரியாக, 35 லட்சம் நுகர்வோர்களிடம் இருந்து, 3,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

மின் கட்டண மையங்கள், அரசு 'இ -- சேவை' மையங்களில் மட்டுமின்றி, வாரிய இணையதளம், மொபைல் செயலி, 'பாரத் பில்' உள்ளிட்ட, 'டிஜிட்டல்' முறையிலும், கட்டணம் செலுத்தலாம். மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதற்கு முந்தைய மாதங்களில் பயன்படுத்திய மின்சாரத்திற்காக, மார்ச்சில், 32 லட்சம் பேர், 2,800 கோடி ரூபாய் கட்டணம் செலுத்தினர். அதில், டிஜிட்டல் முறையில், 1,500 கோடி ரூபாய் வசூலாகிஉள்ளது.பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பயன்படுத்திய மின்சாரத்திற்காக, ஏப்ரலில், 23 லட்சம் பேர், 1,900 கோடி ரூபாய் மின் கட்டணம் செலுத்தியதில், டிஜிட்டல் வாயிலாக, 1,300 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

ஏப்ரலில், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் போன்றவை முற்றிலுமாக செயல்படாத நிலையில், வீடுகளில் மட்டுமே மின் பயன்பாடு இருந்தது.முழு ஊரடங்கு பகுதிகளில், ஜூலை, 15 வரை, அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இதனால், மே மாதம், 34 லட்சம் நுகர்வோரிடம் இருந்து, 1,600 கோடி ரூபாய் மட்டுமே, மின் கட்டணம் வசூலாகியுள்ளது. அதில், 1,050 கோடி ரூபாய், டிஜிட்டல் முறையில் கிடைத்துள்ளது. தற்போது, டிஜிட்டல் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
28-ஜூன்-202015:53:55 IST Report Abuse
Bhaskaran Naangumaathangaluku orumurai kanakeduththu nadutharavargathin vayitril adikkum minvaariyam needoolivaalga
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X