சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சித்தேரிக்குப்பம் பாலம் கட்டும் பணி திடீர் மழையால் பாதிப்பு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

விருத்தாசலம் : சித்தேரிக்குப்பத்தில் தரைப்பாலம் மழையால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், புதிதாக பாலம் கட்டும் பணி, திடீர் மழையால் பாதித்துள்ளது.

விருத்தாசலம் அடுத்த சித்தேரிக்குப்பம் ஊராட்சியில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் இருந்து தே.கோபுராபுரம் வழியாக ஆலடி இணைப்பு சாலை வரை ஐநுாறுக்கும் மேற்பட்ட ஏக்கரில் விளைபொருட்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. சித்தேரிக் குப்பம் தரைப்பாலம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் பெய்த கனமழைக்கு அடித்துச் செல்லப்பட்டது.அப்போது, அமைச்சர்கள் சம்பத், உதயகுமார் தலைமையிலான அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, உயர்மட்ட பாலம் கட்டித்தரப்படும் என உறுதியளித்தனர்.

சமீபத்தில் பாலம் கட்டும் பணிக்கு சுமார் 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் துவங்கின. இதற்காக, தரைத்தளத்திற்கு சாரம் அமைத்து, கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்தது.இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெய்த திடீர் மழைக்கு, பாலம் கட்டும் பகுதியில் தண்ணீர் தேங்கியது. இதனால் பாலம் கட்டும் பணியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X