கள்ளக்காதலை கண்டித்த மனைவியை மிரட்டிய கணவன் மீது வழக்கு பதிவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்காதலை கண்டித்த மனைவியை மிரட்டிய கணவன் மீது வழக்கு பதிவு

Added : ஜூன் 27, 2020
Share

விருத்தாசலம் : கள்ளக்காதலை தட்டிக் கேட்ட மனைவிக்கு கொலைமிரட்டல் விடுத்த கணவன் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விருத்தாசலம் கம்பர் தெருவைச் சேர்ந்தவர் சரவணன், இவரது மனைவி துர்கா, 29; இருவரும் காதலித்து கடந்த 2013ம் திருமணம் செய்தனர். இவர்களுக்கு 2 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் சரவணன் தற்போது வேறு ஒரு பெண்ணிடம் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இதனை கடந்த ஜூன் 5ம் தேதி துர்கா தட்டிக் கேட்டதால் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதில், துர்க்கா தாஷ்கண்ட் நகரில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றார்.

இந்நிலையில், கடந்த 11ம் தேதி சரவணன், தந்தை ராஜேந்திரன், தாய் லட்சுமி ஆகியோர் துர்கா வீட்டிற்கு சென்று, அவரை அசிங்கமாக திட்டி கொலைமிரட்டல் விடுத்தனர்.துர்கா கொடுத்த புகாரின் பேரில், சரவணன் மற்றும் அவரது தந்தை ராஜேந்திரன், தாய் லட்சுமி ஆகியோர் மீது விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X