சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரவலை தடுக்கசேதுக்கரையில் ஊரடங்கு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

சேதுக்கரை:சேதுக்கரை மன்னார் வளைகுடா கடலில் புனித நீராடுவதற்காக சுற்று வட்டார கிராம மக்கள் வருகை தருகின்றனர். முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், பித்ருக்கடன் உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை நிறைவேற்றிய பின்னர்சேதுக்கரை கடலில் நீராடுகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க அரசு பல்வேறு விழிப்புணர்வு வழங்கியும் பின்பற்றாமல் கூட்டமாகவும், நெரிசலாகவும், முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் மக்கள் வருகின்றனர்.சேதுக்கரை முன்னாள் ஊராட்சித்தலைவர் முனியாண்டி கூறியதாவது:இங்கு வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டம் கூடுவதால் சேதுக்கரை கிராம மக்கள் கொரோனா அச்சத்தில் தவித்து வருகின்றனர்.

எனவே ஜூன் 28 (நேற்று) முதல் 10 தினங்களுக்கும், கூடுதல் அவகாசங்களை பொறுத்தும் சேதுக்கரையில் ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். புரோகிதர்கள், முடி எடுப்பவர்கள் உள்ளிட்டவர்கள் கடற்கரைக்கு வருவதில்லை என முடிவெடுத்துள்ளனர். எனவே சுற்றுவட்டார கிராம மக்கள் இங்கு வராமல் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X