பொது செய்தி

தமிழ்நாடு

எளிமையாக நடந்தது வனிதா திருமணம்

Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 எளிமையாக நடந்தது  வனிதா திருமணம்

சென்னை; நடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம், குடும்பத்தினர் சூழ எளிமையாக நடந்தது.தமிழ் சினிமாவில், முதல் படத்திலேயே, விஜய்க்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர், நடிகை வனிதா விஜயகுமார்.

இவர், விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள். அதன் பின், பல படங்களில் நடித்தாலும், முன்னணி நடிகையாக முடியவில்லை. இரண்டு திருமணங்களை சந்தித்த அவர், விவாகரத்து பெற்றார். பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் சொத்து பிரச்னையை சந்தித்த இவர், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.

தற்போது, 'யு - டியூப்' சேனல் ஒன்றில், சமையல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக இருந்த பீட்டர் பாலை, தன் மூன்றாவது கணவராக வனிதா தேர்ந்தெடுத்தார்.வனிதாவின் மகள் உட்பட, இரு வீட்டார் சம்மதத்துடன், நேற்று வனிதா வீட்டில், இருவருக்கும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடந்தது. இதில் பங்கேற்றவர்களில் ஒருவர் தவிர மற்றவர்கள், கொரோனாவை கட்டுப்படுத்த உதவும் முக கவசத்தை அணியவில்லை என்பது, அவரது திருமண படங்கள் வாயிலாக தெரிந்தன.

தன் அம்மாவின் தோழி கொடுத்த வைர மோதிரத்தையே, தன் தாயின் ஆசிர்வாதமாக கருதுவதாக கூறிய, வனிதா - பீட்டர்பால் திருமண படங்கள், இணையத்தில் ரசிகர்களின் வாழ்த்துடன் பகிரப்பட்டு வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
28-ஜூன்-202019:57:41 IST Report Abuse
பெரிய ராசு மானம் கிட்ட பொழப்பு ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X