ராமநாதபுரத்தில் பாதுகாப்பின்றி வெளியேவரும் மக்கள்: சமூக பரவலாகும் அபாயம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்துவரும் நிலையில், மக்கள் முகக்கவசம் அணியாமல்,சமூக இடைவெளியின்றி வெளியே வருவதால் சமூக பரவலாகும் அபாயம் உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் டாக்டர், நர்சுகள், போலீசார், வருவாய்துறை அதிகாரிகள் என இதுவரை 700க்கு மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தினமும் 50 முதல் 70 பேர் புதிதாக பாதிக்கப்படுகின்றனர். 9 பேர் வரை இறந்துள்ளனர்.

இந்த நிலைமையில் போதிய கண்காணிப்பு இல்லாததால் சந்தைத்திடல், அரண்மனை பகுதி, ராமநாதபுரம் பை-பாஸ் ரோடு ஆகிய இடங்களில் சமூக இடைவெளியின்றியும், முகக்கவசம் அணியாமல் பலர் அலட்சியமாக உள்ளனர்.சில ஆட்டோக்கள், பஸ்களில் சமூக இடைவெளியின்றி பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் சமூக பரவலாகும் ஆபத்துஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X