தங்கம் விலை ரூ.232 உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தங்கம் விலை ரூ.232 உயர்வு

Added : ஜூன் 27, 2020
Share

சென்னை; தமிழகத்தில், நேற்று ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 232 ரூபாய் உயர்ந்தது.அமெரிக்கா, சீனா இடையில் நிலவும் வர்த்தக போர் உள்ளிட்ட சர்வதேச காரணங்களால், உள்நாட்டில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.தமிழகத்தில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், கிராம், 4,611 ரூபாய்க்கும்; சவரன், 36 ஆயிரத்து, 888 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 53 ரூபாயாக இருந்தது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில், தங்கம் கிராமுக்கு, 29 ரூபாய் உயர்ந்து, 4,640 ரூபாய்க்கும், சவரனுக்கு, 232 ரூபாய் அதிகரித்து, 37 ஆயிரத்து, 120 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X