சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு தரப்பு மோதல் 5 பேர் கைது

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் அருகே ஏற்பட்ட தகராறில் 15 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து 5 பேரை கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த விராட்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மனைவி ஆனந்தஜோதி, 54; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன்கள் பாபு, 30; ராஜிவ்காந்தி, 36; பெரியசாமி மகன் அன்பு, 30; ஆகியோர் கடந்த 24ம் தேதி மது குடித்துவிட்டு, ஆனந்தஜோதி வீட்டின் தோட்டத்தில் பாட்டிலை உடைத்தனர். இதை ஆனந்தஜோதி தட்டிக்கேட்டார். இதனால் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.இது குறித்து இரு தரப்பு புகாரின் பேரில், பாபு தரப்பில் 8 பேர் மீதும், ஆனந்தஜோதி தரப்பில் 7 பேர் மீதும் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து பாபு, ராஜிவ்காந்தி, அன்பு, செல்வநாதன், அய்யனார் ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X