பொது செய்தி

தமிழ்நாடு

பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டிற்கு ரூ.5 கோடி கடனுதவி

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் தொழில் தொடங்க ரூ. 5 கோடி கடன் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் அன்புச்செல்வன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழக பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) சார்பில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு, 2020--2021ம் ஆண்டில், ரூ. 5 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடன் விண்ணப்பங்களை www.cuddalore.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60க்குள்ளும், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கடனுதவி பெறுவோர், வங்கிக் கோரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.சிறு வணிக கடன் நபர் ஒருவருக்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.5 லட்சம் வரையிலும், அதிகபட்சமாக ரூ.10 லட்சம் 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் பெறலாம். கடன் தொகைக்கேற்ப 3 முதல் 8 ஆண்டுகளுக்குள் கடனை திரும்ப செலுத்த வேண்டும். ஆண்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களின் உறுப்பினருக்கு அதிகபட்சமாக ரூ.60 ஆயிரம் வீதம் 20 நபர்களுக்கு ஆண்களுக்கு -5 சதவீதம், மகளிருக்கு -4 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். புதிய பொற்கால திட்டத்தில் மகளிருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும்.

மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்குவதற்கு 6 சதவீத வட்டி விகிகத்தில் கடன் வழங்கப்படும். இளம் தொழிற்கல்வி பட்டதாரிகள் சுய தொழில் துவங்கவும், மரபு சார்ந்த கலைஞர்கள் (ம) கைவினைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்திடவும், சுய தொழில் துவங்கவும் அதிகபட்ச கடன் தொகை ரூ.10 லட்சம் வழங்கப்படும். ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரையிலும், 10 ஆண்டு தவணையில் வழங்கப்படும்.விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கடலுார் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு பண்டக சாலை வளாகம், கடலுார் என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் உரிய ஆவணங்களுடன் அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X