பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம், விக்கிரவாண்டியில் ஜமாபந்தி

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

திண்டிவனம் : திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி துவங்கியது.மாவட்ட கலால் உதவி ஆணையர் மோகன் தலைமை தாங்கினார்.

மயிலம் குறுவட்டத்தில் உள்ள 20 கிராமங்களில், கிராம கணக்கு தணிக்கை செய்யும் பணி நடந்தது. தாசில்தார் ராஜசேகரன் உட்பட வருவாய் அதிகாரிகள் பங்கேற்றனர்.தற்போது கொரோனா தொற்று காரணமாக பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் வாங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.மேலும், சம்மந்தப்பட்ட கிராம மக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை ஜூலை 15ம் தேதி வரை இணையதளம் வழியாக அனுப்பினால், அதிகாரிகள் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.விக்கிரவாண்டிவிக்கிரவாண்டி தாலுகாவில் கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங்., தலைமை தாங்கினார்.

விக்கிரவாண்டி, சித்தலம்பட்டு, கஞ்சனுார், அன்னியூர் ஆகிய நான்கு குறுவட்டங்களைச் சேர்ந்த 116 கிராமங்களின் வருவாய் தீர்வாய கணக்கு சரி பார்ப்பு பணி துவங்கியது. இதில் வி.ஏ.ஓ.,க்களிடமிருந்து கிராம கணக்குகள் மட்டும் சரிபார்ப்பு பணி நடந்தது.தாசில்தார் பார்த்திபன், மண்டல துணை தாசில்தார் முருகதாஸ், வருவாய் தீர்வாய மேலாளர் உஷா, நேர்முக உதவியாளர் லட்சாதிபதி, தலைமையிடத்து துணை தாசில்தார் முத்தம்மாள், சமூக நல தனி தாசில்தார் உட்பட பலர் பங்கேற்றனர்.செஞ்சிசெஞ்சியில் நடந்த ஜமாபந்தியில் மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா கால நிவாரண நிதியை தனித்துணை ஆட்சியர் வழங்கி துவக்கி வைத்தார்.

செஞ்சியில் கடந்த 26ம் தேதி முதல் வருவாய் தீர்வாயம் எனும் ஜமாபந்தி, விழுப்புரம் தனித் துணை ஆட்சியர் ராஜலட்சுமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான நேற்று கிராம கணக்குகளை தணிக்கை செய்தார். தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா கால நிவாரணமாக 1,000 ரூபாய் வழங்கி துவக்கி வைத்தார்.ஜமாபந்தி மேலாளர் தனி தாசில்தார் செந்தில் வடிவு, தாசில்தார் கோவிந்தராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜன், ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் கலா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X