ஒளிரும் மின் விளக்கு: எஸ்.பி., துவக்கி வைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒளிரும் மின் விளக்கு: எஸ்.பி., துவக்கி வைப்பு

Added : ஜூன் 27, 2020
Share

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் விபத்துகளைத் தவிர்க்க ஒளிரும் மின் விளக்கை எஸ்.பி., துவக்கி வைத்தார்.

விக்கிரவாண்டி தெற்கு பைபாஸ், பாப்பனப்பட்டு அழுக்கு பாலம் அருகே தஞ்சாவூர் - கும்பகோணம் சாலை பிரியும் இடத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்கும் வகையில் அப்பகுதியில் மாவட்ட காவல்துறை சார்பில் ஒளிரும் மின் விளக்கு அமைக்கப்பட்டது. இவற்றை எஸ்.பி., ஜெயக்குமார் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'விழுப்புரம் மாவட்டத்தில் விபத்துக்களைத் தவிர்க்க ஏற்கனவே 32 ஒளிரும் மின் விளக்குகள் அமைத்துள்ளோம். அதன் பிறகு மாவட்டத்தில் விபத்து மற்றும் உயிர் பலி எண்ணிக்கை குறைந்துள்ளது.

தற்போது, தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைப் பகுதிகளில் 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், விபத்துகளைத் தடுக்கும் விதமாக 120 ஒளிரும் மின் விளக்குகளை அமைக்க உள்ளோம். இதில், தற்போது 50 விளக்குகள் செயல்படத் துவங்கியுள்ளது. மீதமுள்ள 70 விளக்குகள் விரைவில் செயல்படத் துவங்கும்.இந்த மின் விளக்குகள் மாவட்ட காவல் துறை சார்பில் செய்யப்பட்டிருந்தாலும் இதற்கான நிதி மாநில நெடுஞ்சாலைத் துறையிடமிருந்து கேட்டு பெறப்பட்டுள்ளது' என்றார்.

நிகழ்ச்சியில், டி.எஸ்.பி., நல்லசிவம், பயிற்சி டி.எஸ் .பி., வசந்த் ராஜ், இன்ஸ்பெக்டர்கள் விஜி, முத்துக்குமரன், சப் இன்ஸ்பெக்டர்கள் மருது, பாலமுருகன், மோசஸ் கிங்ஸ்லி, சங்கர வடிவேல், வங்கி தலைவர் பூர்ணராவ் , இயக்குனர் ஜோதி ராஜா உட்பட பலர் பங்கேற்றனர். திருவெண்ணெய்நல்லுார்சரவணம்பாக்கம் கூட்ரோட்டில் அடிக்கடி சாலை விபத்து ஏற்பட்டு வந்தது. இதனைத் தவிர்க்க தானியங்கி ஒளிரும் மின் விளக்கு அமைக்க போலீசார் திட்டமிட்டனர். அதன்படி, மடப்பட்டு - திருக்கோவிலுார் பிரதான சாலையில் மின் விளக்கு அமைக்கப்பட்டது. அதனை எஸ்.பி., ஜெயக்குமார் இயக்கி துவக்கி வைத்தார்.

இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் புனிதவள்ளி மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X