அரசியல் செய்தி

தமிழ்நாடு

இசை, பாடல்களை கேளுங்கள் மன அழுத்தம் நீங்கும்: ராமதாஸ்

Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை; 'கொரோனா மன அழுத்தத்தில் இருந்து தப்பிக்க, மனதிற்கு இதம் தரும் இசை மற்றும் பாடல்களை கேட்கலாம்' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதேபோல, மக்களின் மன உளைச்சலை போக்க வேண்டிய கடமையும், பொறுப்பும், மாநில அரசுக்கு உண்டு.மன அழுத்தத்தை போக்க, புத்தகங்களை படிக்க வேண்டும்; ஒரு நாளைக்கு, குறைந்தது ஒரு பக்கமாவது மனதில் தோன்றிய விஷயங்களை எழுத வேண்டும்.

மனதிற்கு இதம் தரும் இசை மற்றும் பாடல்களை கேட்கலாம்.வீட்டிலிருந்தே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் ஆகியவற்றின் வாயிலாக, உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வூட்டிக் கொள்ள வேண்டும்.குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் மனம் விட்டுப் பேசி, மனக்கவலைகளை போக்கிக் கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் மேலாக, கொரோனா குறித்த தேவையற்ற அச்சங்களை விலக்கி, அரசின் வழிகாட்டுதல்படி, முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கொரோனாவையும், மன அழுத்தத்தையும் விரட்டி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
28-ஜூன்-202013:49:11 IST Report Abuse
s.rajagopalan அடேடே ... என்னாச்சு இவருக்கு ? நல்ல உபதேசம் செய்கிறாரே ? அ தி மு க வுடன் ..கூட்டணி பேச்சு சந்தடி இல்லாமல் நடக்கிறதா ? இருக்கும்தான் போல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X