நாட்டின் பாதுகாப்பில் அரசியல் கூடாது: ராகுலுக்கு சரத்பவார் குட்டு| Dinamalar

நாட்டின் பாதுகாப்பில் அரசியல் கூடாது: ராகுலுக்கு சரத்பவார் குட்டு

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (26)
Share
நாட்டின் பாதுகாப்பில் அரசியல் கூடாது: ராகுலுக்கு சரத்பவார் குட்டு

மும்பை: ''நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் அரசியல் ஆதாயம் தேடக் கூடாது,'' என, தேசியவாத காங்., கட்சி தலைவர், சரத் பவார் கூறியுள்ளார்.'பிரதமர் மோடி, கல்வான் பள்ளத்தாக்கை சீனாவுக்கு தாரை வார்த்து விட்டார்' என, காங்., - எம்.பி., ராகுல் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து, செய்தியாளர்கள் கேட்டதற்கு, சரத் பவார் கூறியதாவது:நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில், அரசியல் ஆதாயம் தேடக் கூடாது. கடந்த, 1962ல் என்ன நடந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அப்போது, இந்தியாவின், 45 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பை, சீனா ஆக்ரமித்தது. தேச நலன் கருதி, கல்வான் விவகாரத்தில், அரசியல் கூடாது என்பது தான் என் நிலைப்பாடு.கல்வானில், சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பை, இந்திய ராணுவத்தினர் தடுத்துள்ளனர்.

அப்போது தான் மோதல் ஏற்பட்டு, நம் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதை, ராணுவ அமைச்சர் அல்லது தனி நபரின் தோல்வி என்பதை ஒப்புக் கொள்ள மாட்டேன்.எல்லை பகுதியில் நம் ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதால் தான், சீனாவின் ஆக்கிரமிப்பை தடுக்க முடிந்துள்ளது. இல்லையெனில், ஆக்கிரமிப்பு குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால், இது தொடர்பான குற்றச்சாட்டில் நியாயமில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

மஹாராஷ்டிராவில், சிவசேனா தலைமையில், தேசியவாத காங்., - காங்., கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், சரத் பவார், ராகுலை மறைமுகமாக கண்டித்திருப்பது, மோதலுக்கு வித்திட்டுள்ளதாக, அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X