வைட்டமின் சி மாத்திரை தட்டுப்பாடின்றி கிடைக்கும்:அரசு செயலர் மகேசன் காசிராஜன் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வைட்டமின் 'சி' மாத்திரை தட்டுப்பாடின்றி கிடைக்கும்:அரசு செயலர் மகேசன் காசிராஜன் தகவல்

Added : ஜூன் 27, 2020
Share

சிவகங்கை:''கொரோனா தொற்று நோயாளிக்கு சத்து மாத்திரையுடன், வைட்டமின் 'சி' மாத்திரை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்'', என சிவகங்கையில் அரசு செயலர் மகேசன் காசிராஜன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:பிற மாவட்டத்தோடு ஒப்பிடுகையில் சிவகங்கையில் கொரோனா தொற்று பாதிப்பு குறைவு தான். மருத்துவ சிகிச்சையுடன், கபசுரகுடிநீரும் தருகின்றனர். பழைய அரசு மருத்துவமனையில் கூடுதலாக 140 படுக்கை அமைத்து, கொரோனா தொற்று நோயாளிகளுக்கு முழுமையாக சிகிச்சை அளிக்கப்படும்.

அதற்கு பின் மருத்துவ கல்லுாரியில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை தரப்படும். பொது மக்களும் நோயின் தன்மையை உணர்ந்து முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.மாநில அளவில் ஒப்பிடுகையில் கொரோனா தொற்று பாதிப்பில் கடைசி 4வது இடத்தில் தான்சிவகங்கை உள்ளது.

கொரோனா தொற்றுடன் சிகிச்சைக்கு வருவோருக்கு சத்து குறைபாட்டை தவிர்க்க 'ஜிங்க்' உடன் 'வைட்டமின் சி' மாத்திரையும் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவால் இறந்தோரின் உடலை அடக்கம்செய்வதில், குளறுபடி நீடிக்காத வகையில், இறந்தவரின் ஊருக்கே அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X